ஆர்.ஆர்.ஆர். படத்தில் இணைகிறார் நம்ம ரகுல் ப்ரீத் சிங்… செம சான்ஸ்தான்!!

பாகுபலி என்னும் ஹிட் படத்தினைக் கொடுத்த பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலி ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் எனப் பல முன்னணி நடிகர்களைக் கொண்டு ஒரு படத்தை இயக்கி…

பாகுபலி என்னும் ஹிட் படத்தினைக் கொடுத்த பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலி ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் எனப் பல முன்னணி நடிகர்களைக் கொண்டு ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இரத்தம் ரணம் ரௌத்திரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படமும் பாகுபலி படத்தினைப் போல் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாததால், இந்தப் படத்தின் ரிலீஸ் 6 மாதங்கள் கழித்து ஜூலை 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

5557ed98366b149e6eef638b50a7e3c0

அந்தவகையில் தற்போது மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது, அதாவது இப்படத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு நடனமாட வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

பிரமாண்ட இயக்குனர், பாலிவுட் ஹீரோயின், முன்னணிக் கதாநாயகர்களின் படம் என்பதால் கிடைக்கும் வாய்ப்பினை நழுவ விட வேண்டாம் என்று ரகுல் இந்த முடிவினை எடுத்துள்ளார் போலும்.

ரகுல் ப்ரீத் சிங் தமிழில் யுவன், தடையறத் தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, என். ஜி. கே  போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று இவருக்குப் பெரிய அளவில் பெயர் பெற்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன