ராதிகா ஆப்தே ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார், இவர் இந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என அம்மணி பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே. படங்களில் ஒருபுறம் பிசியாக இருந்தாலும், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
இவர் தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன், கபாலி போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்து அசத்தி இருந்தார், இதன் மூலம் ராதிகா ஆப்தே தமிழ் சினிமாவில் பிரபலமானார். ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நிர்வாணமாக நடித்து பிரபலமாகினார்.
இவர் திரைப்படங்களில் பிரபலமாகிறாரோ இல்லையோ, அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நடிப்பதால் சிக்கி சர்ச்சைகளால் பிரபலமாகிறார்.
வெப் தொடரில் சார்லி ஹீன்னம் என்ற ஹாலிவுட் நடிகருடன் நடித்துவரும் இவர், ஊரடங்கினால் வீட்டில் இருந்துவரும் நிலையிலும் சர்ச்சைக்குள் வம்படியாக மாட்டிக் கொண்டுள்ளார்.
அந்தவகையில் தற்போது கடற்கரையில் பிகினி உடையில் படு கவர்ச்சியாய் இருப்பதுபோன்று புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார், மேலும் கேப்ஷனாக “லாக்டவுனை நேசிக்கிறேன்” என்று வைத்துள்ளார். இதனைப் பார்த்த தமிழ் ரசிகர்கள் நீயெல்லாம் தமிழ்ப் பெண்ணா? என்று ரசிகர்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்னர் தென்னிந்திய திரைப்பட விருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் கலந்து கொண்டு பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தார். இவர் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தினை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.