தமிழ்த்திரை உலகில் ரசிகர்களால் நடிகவேள் என்று அழைக்கப்படுபவர் எம்.ஆர்.ராதா. இவர் வில்லன், குணச்சித்திரம், கதாநாயகன் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்தாலும் ரசிகர்களின் மனதில் தனியிடத்தைப் பிடித்து விட்டார். இவரது குரல் மாடுலேஷன் அலாதியானது. மேடைக்கலைஞர்களுக்கு இவரது வாய்ஸ் தான் மிமிக்ரியில் முதல் சாய்ஸ்.
அந்தளவுக்கு அருமையான ஒரு வெரைட்டியான குரல் இவருடையது. இதுவே இவருக்கு பிளஸ் பாயிண்டாகவும் அமைந்தது. பேசும்போதே பல்வேறு வகையான குரல்களில் மாற்றி மாற்றி வெவ்வேறு மாடுலேஷனில் பேசி அசத்துவார். அந்த வகையில் இவரே ஒரு மிமிக்ரி கலைஞர் தான்.
எம்ஜிஆர், சிவாஜி நடித்த பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் வந்து அசத்தியுள்ளார். இவர் ஹீரோவாக நடித்த ரத்தக்கண்ணீர் படம் இன்றளவும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
அந்தளவுக்கு அந்தப் படத்தில் ஸ்டைலிஷான, தத்ரூபமான நடிப்பைக் கொடுத்திருந்தார் எம்.ஆர்.ராதா. எம்ஜிஆருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை எம்ஆர்.ராதா சுட்டார். தொடர்ந்து கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்றார்.
இவரது மகன் ராதாரவி தன் தந்தை குறித்து சில அபூர்வமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க.
எங்க ஐயா கிட்ட நாங்க ரொம்ப நெருங்கினதே இல்லை. எங்க அம்மா தான் எங்களை வளர்த்தாங்க. தனலட்சுமி அம்மா இல்லைன்னா யாருமே கிடையாது. அப்பா திராவிடத்திற்கு பாடுபட்டவர். பெரிய நடிகர். அப்படின்னு தான் சொல்வோம். ஆனா உண்மையாகவே எம்.ஆர்.ராதா என்கிற விலாசத்திற்கு காரணம் என் அம்மா தனலட்சுமி தான்.
என் ஐயா நிறைய பெண்களோடு தொடர்பில் இருந்தவர். எல்லாருக்குமே வீடு வாங்கி கொடுத்திடுவாரு. கூடவே அட்ரஸ_ம் கொடுத்திடுவாரு. திருமதி எம்ஆர்.ராதா என்பது போல். ஆனா எல்லா பிள்ளைகளும் படித்தது தேனாம்பேட்டையில தான். ராதிகாவும் கூட அங்கு தான் படிச்சாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
M.R.ராதா மற்ற நடிகர்களைப் போல இல்லாமல் தீவிரமான முற்போக்கு சிந்தனையாளர். இவர் பெரியார் கொள்கையைப் பின்பற்றுபவர். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்தை ரத்தக்கண்ணீர் படத்தில் அசத்தலாக நடித்து இருப்பார். அந்த வகையில் இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கத்தக்கவையாக இருந்தன. அந்தப் படத்தை இப்போது பார்த்தாலும் அது பொருந்தும்படியான காட்சி அமைப்புகளைக் கொண்டுள்ளது.