தமிழில் பேய்படங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் வரிசையாக வந்த காலம் அது. பீட்சா, காஞ்சனா, அரண்மனை, டிமாண்ட்டி காலணி, மாசு என முன்னணி இயக்குநர்கள் பேய் படங்களை இயக்கி வெற்றி காண இயக்குநர் மிஷ்கினும் அந்த வரிசையில் சேர்ந்து இயக்கிய திரைப்படம் தான் பிசாசு.
இதுவரை வந்த பேய்ப்படங்களில் பயமுறுத்தும் பேயாக அல்லாமல் ரசிகர்களை அழுக வைத்த பேய் படமாக இருந்தது பிசாசு. புதுமுகங்களான நாகா, பிரயாகாக மார்ட்டின், ராஜ்குமார்,அஸ்வத் ஆகியோர் நடித்திருக்க மொத்தப் படத்தையும் தோளில் சுமந்திருப்பார் டத்தோ ராதாரவி. 90-களின் வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருந்த ராதாரவி, பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இதுவரை ராதாரவியை திரையில் வில்லனாக மட்டுமே பார்த்து ரசித்து வந்தவர்கள் பிசாசு படம் இவருக்குள் இருந்த அபாரமான நடிப்பை வெளிக் கொண்டு வந்தது. விபத்தில் மகளை இழந்து வாடும் தந்தையாக நடிப்பில் இவர் அசத்த படம் பார்த்து உருகாத ரசிகர்களே இல்லை எனலாம்.
ரசிகர்களின் சந்திப்பு ஒன்றில் ராதாரவி பேசும் போது, இந்தப் படத்தின் நடித்தது கூட பெரிய விஷயம் என்றும், ஆனால் டப்பிங் பணிகளில் மிகுநத் சிரத்தையெடுத்ததாகவும் கூறியுள்ளார் இராதாரவி. மேலும் மிஷ்கின் தன்னிடம் டயலாக்குகளை இந்த மாதிரி பேசச் சொல்லிக் கொடுத்ததாகவும் கூறிய ராதாரவி அண்ணாமலை படத்தை ஞாபகத்தில் வைத்தே இதுபோன்ற பாணியில் வசனங்களை பேசியதாகக் கூறியிருக்கிறார்.
மாஸ் ஹீரோ படங்களின் டிரைலரை மிஞ்சிய ரியல் ஹீரோ டிரைலர் : யார் அந்த பிரபலம் தெரியுமா?
மேலும் சினிமாவில் வருவது அனைத்தும் உண்மையென நம்பிவிடாதீர்கள். நல்லவனாக இருப்பவன் தான் கெட்டவன். கெட்டவனாக நடிப்பவன்தான் நல்லவன் எனவும் கூறி அதிர வைத்தார்.
பிசாசு படத்தில் என் கண்ணு, என் சாமி, வா சாமி.. என அவர் சொல்லும் வசனங்கள் மகள்களைப் பெற்ற தந்தைகளின் மனதைக் கரைய வைக்கும். மேலும் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் தனது மகளைத் தேடும் காட்சிகளில் ராதாரவியின் அப்படியொரு நடிப்பைப் பார்க்கலாம்.
இறந்து பிசாசாக மாறிய தனது மகளை பாசத்தால் புதைக்காமல் ஐஸ் ரூமில் வைத்திருக்கும் காட்சிகளும் இறுதியில் எடுத்து எரிக்கும் காட்சிகளும் இதுவரை வந்த பேய் படங்களின் இமேஜை உடைத்து நல்ல பேய்படங்களுக்கு புது ரூட்டைக் கொடுத்தது.