கொரோனா வைரஸின் கோரப்பிடியில் இருந்து மீள முடியாமல் உலக நாடுகள் ஸ்தம்பித்து வருகின்றன. 200 க்கும் மேற்பட்ட நாடுகளை ஒரு கை பார்த்துவிட்ட கொரோனா, மெதுவாக மார்ச் மாதம் இந்தியாவில் கால் வைத்தது.
தற்போது 1.5 லட்சத்தினை நெருங்கும் பாதிப்பினை இந்தியா கொண்டிருக்கும் நிலையில், பொதுமக்களின் உணவுத் தட்டுப்பாடு போன்றவற்றினைக் கருத்தில் கொண்டு, அனைத்துவகையான தொழில்களும் ஊரடங்கில் சில தளர்வுகளுடன் செயல்பட அனுமதியினை மத்திய அரசாங்கம் அளித்துள்ளது.
தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டதும், மக்கள் எவ்வித பயமும் இன்றி வீதிகளில் வழக்கம்போல் சாதாரணமாக நடமாடி வருகின்றனர். பலர் கொரோனாவினை மறந்துவிட்டார்களோ என்னவோ, அரசு கூறிய விதிமுறைகளைக் கடைபிடிப்பதேயில்லை.
இந்தநிலையில் நடிகர் மகேஷ்பாபு கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
மகேஷ்பாபு கூறியதாவது, “கொரோனாவுக்கு ஊரடங்கானது தற்போது தளர்த்தப்பட்டுள்ளது, ஆனால் மக்கள் இதனை அஜாக்கிரதையாக நினைக்கக் கூடாது. நாம் தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொருவரும் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். தயவுகூர்ந்து அரசுக்கு ஒத்துழைக்கும் விதமாக மாஸ்க் அணிவது கட்டாயமான ஒன்று. ஒவ்வொரு முறை வெளியே போகும் போதும் மாஸ்க் அணிய மறக்காதீர்கள்’ என்று கூறியுள்ளார்.