புஷ்பா 2 எப்படி இருக்கு? பட்டாசாய் வெடித்தாரா அல்லு அர்ஜுன்..? வெளியான டிவிட்டர் விமர்சனம்..

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் இன்று புஷ்பா 2 திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி உள்ளது. 6 மொழிகளில் வெளியாகியுள்ள புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் முன்பதிவிலேயே…

Pushpa 2

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் இன்று புஷ்பா 2 திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி உள்ளது. 6 மொழிகளில் வெளியாகியுள்ள புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் முன்பதிவிலேயே 100 கோடி வசூலைத் தொட்டுச் சாதனை படைத்தது. இந்திய அளவில் எந்தப் படமும் இப்படி ஓர் சாதனையைச் செய்தது கிடையாது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக படத்தின் புரோமோஷனுக்காக அல்லு அர்ஜுன், ராஷ்மிகா உள்ளிட்டோர் ரசிர்களைச் சந்தித்தனர்.

இந்நிலையில் இன்று காலை புஷ்பா 2 தி ரூல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் ஆராவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஹைதராபாத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் முதல்காட்சியை ரசிகர்களுடன் அல்லு அர்ஜுன் பார்த்து ரசித்தார். இந்நிலையில் புஷ்பா 2 தி ரூல் எப்படி உள்ளது என டிவிட்டர் விமர்சனம் வெளியாகி உள்ளது.

முதல் பாதி சற்று போரடிப்பதாகவும், ஸ்ரீ வள்ளி கதாபாத்திரம் கிரிஞ்ச் ஆக இருக்கிறது எனவும், இரண்டாவது பாதியின் கடைசி 40 நிமிடங்கள் ஜாத்ரா காட்சிகள் பரபரப்பாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார் ரசிகர் ஒருவர். இவர் கொடுத்த மதிப்பெண்கள் 2.75/5

https://x.com/i/status/1864582958121713666

முதல்பாதி திரைக்கதை, இண்டர்வெல், மாஸ் காட்சிகள் போர் எனவும், கேமரா, விஷுவல்ஸ் சிறப்பு என்றும், பின்னனி இசை வித்தியாசமாக உள்ளது எனவும் மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

https://x.com/NaanComrade/status/1864580592555221319/photo/1

படம் மொத்தத்தில் ஓகே எனவும், சண்டைக்காட்சிகள், இண்டர்வெல் காட்சிகள் ஓகே எனவும், பகத் பாசில் காட்சியை இயக்குநர் வீணடித்து விட்டார் எனவும் மற்றொருவர் விமர்சனம் கொடுத்திருக்கிறார்.

https://x.com/cinemaphile438/status/1864492887637151972/photo/1

மேலும் புஷ்பா 2 தி ரூல் பார்த்தவர்கள் தொடர்ந்து தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.