புஷ்பா 2 முழுமையான ஃபஹத் ஃபாசில் படமாக இருக்கும்.. இன்ப அதிர்ச்சி தந்த நஸ்ரியா

ஹைதராபாத்: ஆந்திராவை தாண்டி வடமாநிலங்களிலும் புஷ்பா 2 திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் வெளியான ‘புஷ்பா 2’ படத்தின் ட்ரெய்லரை எல்லா மொழியிலும் பல கோடி பேர் பார்த்துள்ளார்கள். இந்நிலையில் புஷ்பா…

Pushpa 2 will be a complete Fahadh Faasil film: Nazriya Nazim gives a pleasant surprise

ஹைதராபாத்: ஆந்திராவை தாண்டி வடமாநிலங்களிலும் புஷ்பா 2 திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் வெளியான ‘புஷ்பா 2’ படத்தின் ட்ரெய்லரை எல்லா மொழியிலும் பல கோடி பேர் பார்த்துள்ளார்கள். இந்நிலையில் புஷ்பா 2 படம் குறித்து நஸ்ரியா கூறிய தகவல், பகத் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கின் பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘புஷ்பா’ திரைப்படம் கடந்த 2021ம் ஆண்டு வெளியானது. இதில் பன்வார் சிங் என்ற கதாபாத்திரத்தில் வில்லத்தனம் கலந்த காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார் ஃபஹத் பாசில். இதனிடையே புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5-ம் தேதி உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

ஆந்திராவை தாண்டி வடமாநிலங்களிலும் புஷ்பா 2 திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் வெளியான ‘புஷ்பா 2’ படத்தின் ட்ரெய்லரை எல்லா மொழியிலும் பல கோடி பேர் பார்த்துள்ளார்கள். இதில் பஹத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். ஏற்கனவே பஹத் பாசில் வில்லனாக மற்றும் நெகட்டிவ் வேடத்தில் நடித்த பல படங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் புஷ்பா 2’ முழுமையான ஃபஹத் ஃபாசில் படமாக இருக்கும் என்றும் முதல் பாகம் அவருடைய அறிமுகம் தான் என்றும் உண்மையில் ஃபஹத் யார் என்பதை 2-ம் பாகம் காட்டும்” என்றும் நஸ்ரியா தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜுன் – ஃபஹத் ஃபாசில் இருவருக்குமான மோதல் தான் புஷ்பா 2 படத்தின் கதையாக இருக்கிறது என்பதை ட்ரெய்லரை பார்த்தாலே புரியும். முதல் பாகத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஃபஹத் ஃபாசில், 2-ம் பாகத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதனிடையே ‘புஷ்பா 2’ குறித்து ஃபஹத் மனைவி நஸ்ரியா கூறுகையில், “தனது ஒவ்வொரு படத்திலும் நடிப்பால் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறார் ஃபஹத் பாசில். ‘புஷ்பா’ முதல் பாகத்தை விட 2-ம் பாகத்தில் அவருக்கான திரை நேரம் அதிகம். இது முழுமையான ஃபஹத் ஃபாசில் படமாகவே இருக்கும். முதல் பாகம் அவருடைய அறிமுகம் தான், உண்மையில் ஃபஹத் யார் என்பதை 2-ம் பாகம் காட்டும்” என்று கூறியுள்ளார்.