ரிலீஸ் ஆவதற்கு முன்பே 100 கோடி வசூலித்த புஷ்பா 2.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By John A

Published:

புஷ்பா திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்த அல்லு அர்ஜுன் அந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் அடுத்து பார்ட்-2க்கும் தயாரானார். கடந்த 2 வருடங்களாக புஷ்பா 2 பணிகள் நடைபெற்று வந்த வேளையில் நாளை டிசம்பர் 5 அன்று உலகமெங்கும் புஷ்பா 2 ரிலீஸ் ஆகிறது. 6 மொழிகளில் வெளியாகும் இப்படம் இதுவரை எந்த ஒரு இந்தியத் திரைப்படமும் புரியாத சாதனையைப் படைத்திருக்கிறது.

அதாவது ரிலீஸூக்கு முன்பே முன்பதிவில் மட்டும் சுமார் 100 கோ அளவிலான வசூலைப் பெற்றிருக்கிறது. பாலிவுட், கோலிவுட் சூப்பர் ஸ்டார்களான ஷாரூக், ரஜினி போன்றோரின் படங்கள் கூட இந்தச் சாதனையைப் பெறவில்லை. தேசிய விருது பெற்ற புஷ்பா படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்வித்தது.

’புஷ்பா 2’ ரிலீஸால் ரூ.426 கோடி பங்குச்சந்தையில் லாபம் பெற்ற நிறுவனம்..!

சுகுமார் இயக்கியுள்ள புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் செம்மரக் கடத்தலை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார். படத்தில் அல்லு அர்ஜுனுடன், ராஷ்மிகா, பகத் பாசில், பிரகாஷ்ராஜ், பிரியாமணி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தென்னிந்திய நட்சத்திரங்கள் அனைத்தும் இணைந்துள்ள நிலையில் புஷ்பா 2 திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்பதிவு வசூலில் இப்போதே 100 கோடியைத் தொட்ட புஷ்பா 2 ரிலீஸ் ஆனவுடன் 1000 கோடி கலெக்ஷனை எளிதில் தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக அளவில் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் புஷ்பா2 திரைப்படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை ஹிட் ஆகியுள்ள நிலையில் நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.