Pushpa 2 box office: புஷ்பான்னா இண்டர்நேசனல்.. வசூலில் சொல்லி அடித்த அல்லு அர்ஜூன்
Pushpa 2 box office: புஷ்பான்னா இண்டர்நேசனல்.. வசூலில் சொல்லி அடித்த அல்லு அர்ஜூன்
ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.294 கோடி வசூலை குவித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது ‘புஷ்பா 1’. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் டிசம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமை வெளியானது. ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சாம்.சி.எஸ்.பின்னணி இசையமைத்துள்ளார்.
இந்த படத்திற்காக கடந்த 1 மாதகாலமாகவே புரமோசன் வேலையில் ஈடுபட்டார் அல்லு அர்ஜூன். எந்த மாநிலத்திற்கு போகிறாரோ அந்த மாநில மொழியில் பேசி ரசிகர்களை கவர்ந்தார் அல்லு அர்ஜூன். புஷ்பா 2 வெளியான உடனேயே முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். புஷ்பான்னா நேசனல்னு நெனைச்சியா.. இன்டர்நேசனல்.. என்ற வசனம் வரும் போது தியேட்டரில் தீ பிடிக்கிறது. படம் வேற லெவல் நிச்சயம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகும் என்று ஆருடம் சொல்கின்றனர்.
ரசிகர்கள் கணித்தது போல வசூலில் சொல்லி அடித்துள்ளது புஷ்பா 2. படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.294 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தின் முதல் நாள் வசூலான ரூ.222 கோடி சாதனையை முறியடித்து, முதல்நாளின் அதிகபட்ச ஓப்பனிங் கொண்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது அல்லு அர்ஜூனின் புஷ்பா 2.
இந்தியாவில் மட்டும் படம் ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுன் திரை வாழ்வில் இது அதிகபட்ச ஓப்பனிங் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் பாட்ஷாவான ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் இந்தி வெர்ஷன் முதல் நாளில் ரூ.65 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. ஆனால், ‘புஷ்பா 2’ இந்தி வெர்ஷன் அதன் சாதனையை முறியடித்து முதல் நாளில் ரூ.72 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது. இது இந்தியில் வெளியான படங்களில் முதல் நாள் அதிகபட்ச வசூலாகும். இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சாதனை யாராலும் முறியடிக்க முடியாத சாதனை என்று கொண்டாடுகின்றனர் அல்லு அர்ஜூனின் ரசிகர்கள்.