பள்ளி மாணவர்கள் வயசு காலத்தில் செய்யும் அலும்புக்கு அளவே இருக்காது. இது அந்த காலங்களில் இருந்தே இருந்து வருகிறது. தற்போது இருக்கும் நவீன நாகரீக யுகத்தில் இது எல்லாம் கொஞ்சம் அத்துமீறி போகிறது.
முக்கியமாக சிகை அலங்காரம் செய்யும் மாணவர்கள் இஷ்டத்துக்கு செய்கின்றனர். பொதுவாக தலையில் முடியை அதிகம் வைத்து வெட்டாதே என வீட்டில் அப்பா அம்மா சொல்வார்கள்.அ தையே பலரும் கேட்க மாட்டார்கள் ஏனென்றால் சாதாரணமாக முடி கொஞ்சம் அதிகம் வைத்துக்கொண்டால் தலை சீவுவதற்கு பயன்படுமே என்று நினைப்பார்கள் ஆனால் அதற்கே வீட்டில் கடுமையான வசவுகளை மாணவர்கள் வாங்கி இருப்பார்கள்.
ஆனால் தற்போது நிலைமை கை மீறி விட்டது போல் தெரிகிறது. முடி வெட்டுகிறேன் என்று இஷ்டத்துக்கு முடி வெட்டுகிறார்கள்.
கவுண்டமணி ஒரு படத்தில் செந்திலை சொல்வது போல உன்னை மாதிரி பல பய இங்க கொஞ்சம் ப்ளீச்சு இங்க கொஞ்சம் ப்ளீச்சு என அலையுறான் என சொல்வார். அது போல பல கலர் மண்டைகளுடன் புள்ளிங்கோ ஸ்டைலில் மாணவர்கள் அலைகிறார்கள்.
இது போலவே ஜெய்ஹிந்த் படத்தில் அரைகுறை முடியுடன் வரும் செந்திலை பார்த்து என்னடா தலையில கீரிப்புள்ள படுத்துருக்கு என கவுண்டமணி சொல்வார். இது போலத்தான் பல மாணவர்கள் திரிகிறார்கள்.
இவர்களுக்கு இந்த ஸ்டைலை அறிமுகப்படுத்துவதே சலூன் கடைக்காரர்கள்தான். முடியை அதிகம் வைத்தால் கூட பரவாயில்லை.ஸ்டைல் என மிக ஒழுங்கீனமான முறையில் தலை முடியை வைத்து பல மாணவர்கள் திரிகிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விசயங்களே. இந்த புள்ளிங்கோ பாய்ஸின் தொல்லை தாங்க முடியாத மேலகரம் பள்ளி தலைமை ஆசிரியர் சலூன் கடைக்காரர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
மாணவர்களுக்கு ஒழுக்கத்தை மேம்படுத்துவது ஆசிரியர்களை மட்டும் சார்ந்த விசயமல்ல. இதில் சமூகத்துக்கும் தொடர்பு உள்ளது. அதில் சிகை அலங்கார நிபுணர்களாகிய நீங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றீர்கள்.
உங்கள் செயல்பாடே மாணவர்களின் அகத்தையும் புறத்தையும் அலங்கரிக்க செய்கிறது.
உங்ககிட்ட ஒரு கோரிக்கை பாக்ஸ் கட்டிங், ஸ்டெப் கட்டிங், தலையில் கோடு போடுதல், வி கட் , ஸ்பைக் இது போல மாணவர்களுக்கு முடிவெட்டி விடுவதை தவிர்க்கும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.