ரசிகர்களை மிரளவைத்த சைக்கோ கில்லர் திரைப்படங்கள் ஒரு பார்வை!

By Velmurugan

Published:

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் கமர்சியல் படங்களுக்கு இணையாக திரில்லர் படங்களுக்கும் அதிகப்படியான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். விறுவிறுப்பான கதைக்களம் அடுத்தடுத்து நடக்கும் பல மர்மங்கள், படத்தின் இறுதி வரை ரசிகர்களை பிரமிப்பில் வைத்திருக்கும். அந்த வகையில் ரசிகர்கள் கொண்டாடும் ஐந்து திரில்லர் திரைப்படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நான் பார்க்கும் முதல் திரைப்படம் கலைஞன். ஜி பி விஜயன் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கலைஞன். இந்த படத்தில் கமல்ஹாசன், பிந்தியா, சிவரஞ்சனி என பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் திடீரென்று மர்மமான முறையில் வரிசையாக கொலை நடந்து வரும். அந்த கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் கமல் மீது அனைத்து புகார்களும் திரும்பும். யார் தான் அந்த கொலையாளி என்று பார்ப்பவர்களை எதிர்பார்க்க வைக்கும் அளவிற்கு மிகவும் திரில்லராக படம் எடுக்கப்பட்டிருக்கும். மேலும் இந்த படம் 100 நாட்களுக்கு திரையரங்குகளில் ஓடி வசூல் சாதனை படைத்தது.

அடுத்த படம் 2006 ஆம் ஆண்டு கெளதம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு திரைப்படம். இந்தத் திரைப்படம் க்ரைம் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக வெளியாக இருந்தது. கமலுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்தது. கிட்டத்தட்ட 500 மில்லியன் வசூலை பெற்று சென்னையில் மட்டும் 16 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்ட முதல் படம் என்ற பெருமை இப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் பெண்களை துன்புறுத்தி வன்முறைக்கு ஆளாக்கி மர்மமான முறையில் கொலை செய்யும் இரண்டு சைக்கோ கில்லர்களை கண்டுபிடிக்கும் ராகவா என்னும் கதாபாத்திரத்தில் கமல் நடித்திருப்பார்.

மூன்றாவதாக நாம் பார்க்கும் திரைப்படம் மன்மதன். ஏ. ஜே. முருகன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மன்மதன். இந்த படத்தில் சிம்பு, ஜோதிகா, கவுண்டமணி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். ஆண்களை ஏமாற்றும் பெண்களை கொலை செய்யும் சைக்கோ கில்லர் கதாபாத்திரத்தில்,மன்மதன் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருப்பார். இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 150 நாட்களுக்கு மேல் ஓடி பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹீட் ஆனது.

நான்காவதாக நாம் பார்க்கும் திரைப்படம் சைக்கோ. மிஷ்கின் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு சைக்கோ திரைப்படம் வெளிவந்தது.இதில் உதயநிதி, நித்யா மேனன் என பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையானது பெண்களை கடத்தி கொடூரமான முறையில் அவர்களை கத்தி போட்டு கொலை செய்யும் ஒரு சைக்கோ கொலைகாரனை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

லியோ திரைப்படம் முழுக்க முழுக்க ரீமேக் படமா? உண்மையை உடைத்த பிரபலம்!

ஐந்தாவதாக நாம் பார்க்கும் திரைப்படம் ராட்சசன். த்ரில்லர் திரைப்படம் என்றாலே ரசிகர்களான அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது ராட்சசன் திரைப்படம். அந்த அளவிற்கு இப்படம் மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்து மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் த்ரில்லர் படமாக வெளிவந்தது. இப்படத்தில் மர்மமாக கொலை செய்யும் கொலைகாரனை கண்டுபிடிக்கும் போலீஸ் கதை பத்திரத்தில் விஷ்ணு விஷால் கச்சிதமாக நடித்திருப்பார். அத்துடன் இப்படத்தை பார்ப்பதற்கு சுவாரசியமாகவும் அதிக எதிர்பார்ப்புகளுடன் கதை அமைந்து ஹாரர் படமாக வெற்றி பெற்று இருக்கிறது.