தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு என் சேகர் என்பவரை தனி அதிகாரியாக நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்
இந்த வழக்கு கடந்த சில வாரங்களாக விசாரணை நடந்து வந்த நிலையில் இன்று இது குறித்து ஒரு முக்கிய உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார்
இதன்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது
இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு விரைவில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தேர்தல் நடைபெற்றால் மீண்டும் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது