தமிழில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்து வரும் ப்ரியா பவானிசங்கர் முதல் முறையாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கு பிரபல நடிகர் மஞ்சு மனோஜ் நடிக்கயிருக்கும் திரைப்படம் ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்த படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பேபி நிவாரணா என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் இந்த பூஜையில் கலந்து கொண்ட நடிகர் ராம்சரந்தேஜா படகுழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 11ஆம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளது என்பதும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது