பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் ரசிகர்கள் கடும் வருத்தம்

40 வருடங்களாக பிரசாத் ஸ்டுடியோவில் தனது இசைப்பணிகளை செய்து வருபவர் இசைஞானி இளையராஜா. இங்குதான் இசைஞானி இசையமைத்த காலத்தால் அழியாத பல மெட்டுக்கள் பிறந்த இடமாக கருதப்படுகிறது. இந்த பிரசாத் ஸ்டுடியோவை நிறுவியவர் அந்தக்கால…

40 வருடங்களாக பிரசாத் ஸ்டுடியோவில் தனது இசைப்பணிகளை செய்து வருபவர் இசைஞானி இளையராஜா. இங்குதான் இசைஞானி இசையமைத்த காலத்தால் அழியாத பல மெட்டுக்கள் பிறந்த இடமாக கருதப்படுகிறது.

2acd3ed27641581f50e3c25814deccef

இந்த பிரசாத் ஸ்டுடியோவை நிறுவியவர் அந்தக்கால தயாரிப்பாளர் எல்.வி பிரசாத் இவரும் சரி இவரது மகனும் சரி இளையராஜா தங்கள் ஸ்டுடியோவில் இருப்பதை பெருமையாக கருதினர்.

அதன்படி இளையராஜாவும் வாடகைக்குத்தான் இங்கு இருந்து வருகிறார். மிகவும் ராசியான இடமாக கருதப்பட்ட இவ்விடம் இப்போது எல்.வி பிரசாத்தின் பேரன் காலத்தில் பஞ்சாயத்து ஆகியுள்ளது.

ஸ்டுடியோவை காலி செய்ய நிர்வாகம் சொல்வதும் வாடகை சரியாக கொடுத்து கொண்டிருக்கும் இளையராஜா அதை மறுப்பதும் பிரச்சினைக்குரியதாகி உள்ளது.

இந்நிலையில் நேற்று பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவுக்காக திரண்ட இயக்குனர் பாரதிராஜா, சீமான் போன்றோர் நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். விரைவில் சுமூகத்தீர்வு எட்டப்படும் என தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இளையராஜா ரசிகர்களுக்கு இது மிகப்பெரும் வருத்தத்தை அளித்துள்ளது. இசைஞானி அங்கு இல்லாமல் போனால் அது கடவுள் இல்லாத கருவறைக்கு சமம் என ரசிகர்கள் நெகிழ்ந்து கூறியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன