Parvathy vs Prajean : பார்வதி பற்றி பிரஜின் சொன்ன ஒரே ஒரு விஷயத்தால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்கள் சிலர் கொஞ்சம் கடுப்பாகி எரிச்சலில் சுற்றும் சூழல் தான் தற்போது உருவாகி வருகிறது. முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் மிக மோசமான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி வந்தார்கள்.
அப்படி ஒரு சூழலில் தான், Wild Card போட்டியாளர்களாக அமித், திவ்யா, பிரஜின் மற்றும் சாண்ட்ரா ஆகிய 4 பேரும் உள்ளே நுழைந்திருந்தார்கள். இவர்கள் உள்ளே இருந்தவர்கள் பற்றி நிறைய விமர்சனங்களை முன்வைத்து என்ட்ரி கொடுக்க, இவர்கள் சொன்னதற்கு எதிராக தான் ஆடியும் வருகிறார்கள். மேலும் Wild card போட்டியாளர் திவ்யா தான் இந்த வாரத்தின் கேப்டனாக செயல்பட்டும் வருகிறார்.
பார்வதி பற்றி பிரஜின்
எந்த இடத்திலும் சிரிக்காமல் தான் சொல்வது தான் சரி என்ற எண்ணம் திவ்யாவுக்கு இருக்க, பார்வதி, கம்ருதீன் உள்ளிட்ட போட்டியாளர்களுடன் அவருக்கு சண்டை தான் நடந்து வருகிறது. அதே போல பிரஜினும் தேவை இல்லாமல் கத்தி பேசி சண்டை போடுவது என இருக்க, சாண்ட்ரா மற்றும் அமித் ஆகியோர் சிறப்பாக ஆடியும் வருகின்றனர்.
பிரஜின் ஆட்டத்தின் மீது கலவையான விமர்சனங்கள் இருக்க, சமீபத்தில் அவர் பார்வதி பற்றி சொன்ன வார்த்தைகள் அதிக சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளது. சாண்ட்ராவிடம் தனது கணவர் பிரஜினை சைட் அடிப்பதாக வேடிக்கையாக சொல்லியிருந்தார் பார்வதி. இதே போல, பிரஜினை தொட்டு தொட்டு பார்வதி பேசியதாகவும் தெரிகிறது.
மண்டியிட்டு வேண்டுகோள்
நட்பு ரீதியில் பார்வதி இதை செய்திருக்கலாம் என தெரியும் நிலையில், இது பற்றி அனைவர் முன்னிலையில் பேசும் பிரஜின், ‘எனக்கு மனைவி இருக்காங்க.. நான் ஒரு Ehitcs ஓட வாழ்றேன். நான் ஒரு பெயர் எடுத்து வச்சுருக்கேன்.. 2 குழந்தைங்க, குடும்பம்னு எல்லாம் இருக்காங்க.. நான் ஒரு போராட்டத்தை தாண்டி அடுத்த கட்டத்துக்காக இங்க வந்துருக்கேன்.. நான் ஒரு மனநிலைல போய்ட்டுருக்கும் போது என் முதுகுல இப்படி வந்து கைவைக்குறது’ என பார்வதி தன்னிடம் உரசுவதை சைகையாக செய்து காட்டுகிறார் பிரஜின்.

ஒரு அண்ணன் என்ற நோக்கத்தில் பார்வதி அப்படி செய்ததாக விளக்கம் கொடுத்தாலும் அதை ஏற்க மறுக்கும் பிரஜின், ‘நான் கட்டிபுடிச்சது தப்புன்னு எங்கயும் சொல்லல.. எனக்கு ஒரு குடும்பம் இருக்கு.. நான் இப்படியே இருந்துக்குறேன். என்னை வச்சு Content உருவாக்க வேணாம். நான் மண்டியிட்டு கேட்டுக்குறேன். என் பக்கம் வந்துடாதீங்க. அடுத்த தடவ நான் எப்படி React பண்ணுவேன்னு தெரியாது’ என்றும் சொல்லி முடிக்கிறார்..
பிக் பாஸ் வீட்டில் தொடுவது என்பது இயல்பான விஷயமாக இருக்க, பார்வதியை ஏதோ தவறாக சொன்னது போல ப்ரஜின் பேசியது சுபிக்ஷா மற்றும் வியானா ஆகியோருக்கு எரிச்சலையே உருவாக்கி உள்ளது. இது பற்றி பார்வதியிடம் பேசும் வியானா, ‘மண்டியிட்டு பார்வதி பத்தி இப்படி அவர் பேசுனது ஒரு பொண்ணா எனக்கு பிடிக்கல. National லெவல்ல பாக்குற ஒரு ஷோல பேசுறப்போ, வெளிய எனக்கு Bold ஆ பாக்குற பார்வதி, நிஜத்துல ஆண்கள்கிட்ட போய் போய் பேசுற கேரக்டர்னு சொல்ற மாதிரி இருக்கு’ என தனது விமர்சனத்தையும் கூறுகிறார்.

இதற்கு பதில் சொல்லும் பார்வதி, ‘நான் இதை கேள்வி கேட்க போவதில்லை. அவர்கள் வேண்டுமென்றே இதை செய்கிறார்கள் என எனக்கு தெரியும். நான் ஒரு எல்லையை வைத்திருக்க போகிறேன்’ என்றும் சொல்கிறார். இது சர்ச்சையை உருவாக்கினாலும் விஜய் சேதுபதி இதுபற்றி பிரஜினிடம் கேள்வி கேட்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

