சினிமாவினைப் பொறுத்தவரை புதிதாக அறிமுகமாகும் இயக்குநர்கள் வித்தியாசமான கதைக்களங்களுடன் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து அதிக சிரத்தை எடுத்து படத்தினை இயக்குவார்கள். அப்படி வித்தியாசமான கதைக்களத்துடன் வந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சொல்லமலே. இயக்குநர் சசியின் முதல் திரைப்படம். லிவிங்ஸ்டனுக்கு தமிழ்சினிமாவில் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம். அதுவரை குணச்சித்திரம், துணைக் கதாபாத்திரங்களில் நடித்த லிவிங்ஸ்டனை ஹீரோவாக்கி வலுவான கதை, திரைக்கதையுடன் இயக்கி ஹிட் லிஸ்ட்டில் இணைத்தார் இயக்குநர் சசி.
இந்தப் படத்துக்காக முதன் முதலில் ஹீரோவாக பேசப்பட்டவர் நடிகர் பிரபு தேவா. தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் சுந்தரம் மாஸ்டர் பிரபுதேவாவிற்கு ஒரு படம் தயாரியுங்கள் என்று கோரிக்கை விடுக்க கலைப்புலி எஸ்.தாணு அப்போது வாய்ப்புக் கேட்டிருந்த இயக்குநர் சசியை பிரபுதேவாவிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அப்போது அவரிடம் சொல்லாமலே படத்தின் கதையைக் கூற அவரும் ஒப்புக்கொண்டார்.
இனிமேல் ஸ்ரீகாந்தை ஹீரோவா வச்சு படம் எடுக்க மாட்டேன்.. கடுப்பான இயக்குநர் ஹரி.. ஏன் தெரியுமா?
அதன்பின் இயக்குநர் சசி ஒரு மாதிரி போஸ்டர் ஒன்றை வடிவமைத்து அதை தாணுவிடம் கொடுக்க அவரும் அதை பிரபுதேவாவிடம் காண்பித்திருக்கிறார். அதைப் பார்த்த பிரபுதேவாவிற்கு அதிர்ச்சி. இன்னும் முதல் படமே எடுக்கவில்லை. அதற்குள் இயக்குநர் சசி வழங்கும் ‘கவிதை’ தயாரிப்பு எஸ். தாணு என்று எழுதியிருக்கிறார். பிரபுதேவாவிற்கு இந்தப் போஸ்டரில் சசியின் பெயர் மேலே இருந்தது கண்டு இன்னும் வளரவே இல்லை அதற்குள் இவரின் பெயரை மேலே போட்டு உங்கள் பெயரைக் கீழே போடுகிறார். எனவே இது வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
தயாரிப்பாளர் தாணு இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூற பிரபுதேவா சம்மதிக்கவில்லை. அதன்பின் இயக்குநர் சசியும் பிரபுதேவாவினைப் பார்த்து விளக்கம் கூற அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லையாம். எனவே சொல்லமலே படத்தினை பிரபுதேவா நடிக்க மறுத்தால் தாணுவும் அதை பின்னர் தயாரிக்கவில்லை. இதனையடுத்து சொல்லமலே படத்தினை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரித்து ஹிட் கொடுத்தார்.
மேலும் கலைப்புலி தாணு இயக்குநர் வசந்தினை பிரபுதேவாவிற்கு ஒரு கதை தயார் செய்யச் சொல்ல அவரும் நிறைய காலதாமதம் ஆகும் எனக் காரணம் கூறி நிராகரித்திருக்கிறார். அதன்பின்பே தாணு பிரபுதேவாவிற்கு வி.ஐ.பி படத்தினை இயக்குநர் சபாபதியைக் கொண்டு தயாரித்தார்.