தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் என்றாலே சொதப்பல் தான்.. அந்த பட்டியலில் இணைகிறதா ‘கும்கி 2’.. பிரபு சாலமன் இயக்கம் தேறுகிறதா? புதுமுக ஹீரோ, ஹீரோயின் எப்படி?

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான ‘கும்கி’ என்ற திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், ‘கும்கி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி ஒரு சில ஆண்டுகள் ஆகிவிட்டன.…

kumki 2

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான ‘கும்கி’ என்ற திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், ‘கும்கி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி ஒரு சில ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், ஒரு சில சட்ட சிக்கல்கள் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இந்த படம் சில ஆண்டுகள் கிடப்பில் இருந்த நிலையில், தற்போதுதான் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

இந்த படம் எடுக்கப்பட்ட காலகட்டம் வேறு, தற்போதைய காலகட்டம் வேறு என்பது பல காட்சிகளில் தெரிய வருகிறது. இயக்குனர் லிங்குசாமியின் அண்ணன் மருமகன் என்பவர் மதி என்பவர் தான் ஹீரோவாக நடித்துள்ளார். ஷ்ரிதா ஹீரோயினாக நடித்துள்ளார். ஒரு முக்கிய கேரக்டரில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார்.

இந்த படத்தின் கதையை பார்த்தால், ஒரு குட்டி யானை குழியில் விழுந்து தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில், சிறுவன் அந்த யானையை காப்பாற்றுகிறான். யானைக்கும் அந்த சிறுவனுக்கும் பாசப் பிணைப்பு உருவாகி இருவரும் நெருக்கமாகின்றனர்.

இந்த நிலையில், சிறுவன் பெரியவனாகி வெளியூரில் கல்லூரிகளுக்கு படிக்க வந்த நிலையில், மீண்டும் ஊருக்கு வரும்போது யானையை தேடுகிறான். அப்போது அந்த யானையை அரசியல்வாதிகள் கடத்தி சென்று பலியிட முயற்சிக்கும்போது, அந்த யானையை ஹீரோ காப்பாற்றுகிறார். யானையை காப்பாற்ற ஹீரோயின் எந்த வகையில் உதவி செய்கிறார்? இந்த கதைக்கு அர்ஜுன் தாசுக்கும் என்ன சம்பந்தம்? போன்ற கேள்விகளுக்கு கிளைமாக்ஸில்தான் விடை கிடைக்கிறது.

இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, சமீபகாலமாக நல்ல பாடல்களை போட்டு பிரபலமாகி வரும் நிலையில், இந்த படத்தில் அவருடைய பாடல்களும் சரி, பின்னணி இசைகளும் சரி பெரும் ஏமாற்றத்தை கொடுக்கின்றன.

யானையைப் பலி கொடுப்பது என்ற கான்செப்ட் இதுவரை யாரும் கேள்விப்பட்டதே இல்லை. பிரபு சாலமனுக்கு இந்த கான்செப்ட் எப்படி கிடைத்தது என்றே தெரியவில்லை. அதனால் படத்தின் கதையோடு ஒட்ட முடியவில்லை.

காடுகள் மற்றும் யானை சம்பந்தப்பட்ட காட்சிகள் அழகாக படமாக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், திரைக்கதையில் மிகப்பெரிய அளவில் ஓட்டை இருப்பதால் காட்சிகளை ரசிக்க முடியவில்லை. பல ஆண்டுகள் கழித்து வருவதால், நிறைய சீன்கள் இப்போதைய நிலைக்கு ஒட்டவில்லை என்பதும் ஒரு பெரிய மைனஸ் ஆக இருந்தது.

கதாநாயகனுக்கும் யானைக்கும் இடையிலான பாசத்தை தவிர படத்தில் வேறு எதுவுமே இல்லை என்பதும், எந்தவித திருப்பமும் இல்லாத திரைக்கதை மிகப்பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், தமிழ் சினிமாவில் பல இரண்டாம் பாக கதைகள் தோல்வி அடைந்த நிலையில், அந்த பட்டியலில் தான் இந்த படமும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.