ராமரா நடிச்சவரு அவ்ளோ மோசமானவரா?.. செட்ல அது இல்லாமல் பிரபாஸால் இருக்கவே முடியாதாம்!..

By Sarath

Published:

ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்த பிரபாஸ் ஒரு செயின் ஸ்மோக்கர் மற்றும் தீவிரமான மதுப் பிரியர் என ஏகப்பட்ட புகைப்பட ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களில் நெட்டிசென்கள் பதிவிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா ஹீரோவாக மாறியவர் நடிகர் பிரபாஸ். அதன் பின்னர் அவர் நடித்த பல படங்கள் படுதோல்வியை சந்திக்க காரணமே அவரது தீவிர புகைப்பழக்கம் மற்றும் மது பழக்கம் தான் எனக் கூறுகின்றனர்.

செயின் ஸ்மோக்கர்:

பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு ஓவராக சரக்கு அடிப்பது புகைப்பிடிப்பது என ஜாலியான வாழ்க்கை வாங்க வந்த பிரபாஸ் திடீரென அதிக எடை போடுவதற்கும் அவரது கெட்ட பழக்கம் தான் காரணம் எனக் கூறுகின்றனர்.

சினிமா பிரபலங்கள் பலரும் ஒரு நாளைக்கு 100 சிகரெட்டுக்கு மேல் பிடித்தேன் என பந்தாவாக பேசி வருவது எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். திடீரென இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட்டு பிரபலங்கள் மரணமடைய காரணம் புகைப்பிடிக்கும் பழக்கம் தான் எனக் கூறுகின்றனர். சமீபத்தில் உயிரிழந்த டேனியல் பாலாஜியும் தீவிர புகைப்பழக்கத்திற்கு ஆளானவர் என்று அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றனர்.

ஓவர் குடி பழக்கம்:

புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் மது குடிக்கும் பழக்கம் இருந்தால் சினிமாவில் சரியாக கவனம் செலுத்த முடியாது என்னும் தங்களது உடம்பையே நன்றாக பேணி பாதுகாக்க முடியாது என்றும் கூறுகின்றனர். பாகுபலி படத்தை வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன.

கடைசியாக கடந்த ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் திரைப்படம் 700 கோடி ரூபாய் ஈட்டியது. ஆனால் அந்தப் படத்திற்கும் மோசமான விமர்சனங்களை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. கன்னட நடிகரான யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் பாகுபலி படத்தின் மூலம் 1800 கோடி வசூல் செய்த பிரபாஸ் 700 கோடி ரூபாய் வசூல் செய்ததெல்லாம் பெரிய விஷயமே கிடையாது என கூறுகின்றனர்.

ஆதிபுருஷ் படத்தில் நடிக்கும் போதும் அசைவம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் என்றும் தற்போது கல்கி படத்தில் நடித்து வரும் பிரபாஸ் விரதமே இருக்காமல் அசைவும், சிகரெட் மற்றும் மது உடன் தான் நடித்து வருகிறார் எனக் கூறுகின்றனர்.