உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் இருக்கிறது. வெளிநாட்டு வேலையில் இருப்போர் இங்கு உள்நாடு வரமுடியவில்லை கெடுபிடிகள் அதிகமாக இருக்கிறது.
தந்தை ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று தெரிந்து இந்தியா வந்த மகன் காய்ச்சல் பாதிப்பால் விமான நிலையத்திலே மடக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டதால் திடீரென இறந்து போன தந்தையின் இறுதிச்சடங்கை வீடியோவில் பார்க்கும் நிலை ஏற்பட்டது.
அரசும் உள்ளூரிலேயே இருக்கும்படியும் பொதுக்கூட்டம் நடத்த, தியேட்டரில் திரைப்படங்களை திரையிட, கோவில்களுக்கு செல்ல , சுற்றுலா செல்ல என கடும் தடைகளை விதித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் பிரபாஸும், முகமூடி படத்தில் ஜீவாவுடன் நடித்த பூஜா ஹெக்டே என்ற நடிகையும் ஜார்ஜியா நாட்டுக்கு இந்தியாவில் இருக்கும் கொரோனா தடையை மீறி சென்றுள்ளனர்.
இருவரும் இணைந்து நடிக்கும் ஜான் என்கிற ஓ டியர் படத்தின் படப்பிடிப்பு அங்கு நடக்கிறது.
படப்பிடிப்பை ரத்து செய்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும், திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியாது போன்ற காரணங்களால் கொரோனாவை எதிர்கொண்டு அதனை தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இப்படக்குழு சென்றிருக்கிறதாம்.