விஜய்க்கு எதிராக அப்பட்டமாக கம்பு சுத்தும் பிரபல தொலைக்காட்சி.. குமுறும் ரசிகர்கள்

By Keerthana

Published:

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்பியதில் இருந்தே பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகை அளித்தது. ரசிகர்களை ஒவ்வொரு அணியாக பலப்படுத்துவது, ஐடி விங்க் உருவாக்குவது, வழக்கறிஞர் அணி உருவாக்குவது, மகளிர் அணி உருவாக்குவது என பல விஷயங்களை செய்து வருகிறார் விஜய்.

ஆனால் விஜய் எப்போது அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னாரோ அப்போது முதலே ஊடகங்கள் அவரை கண்கொத்தி பாம்பாக சுற்றத்தொடங்கி உள்ளன. குறிப்பிட்ட ஒரு ஊடகம், விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்யும் தவறுகளை , அரசியல் நோக்கத்துடன் மிக மோசமாக விமர்சித்து, விஜய்யையும் சேர்த்து விமர்சித்து வருகிறதாம். விஜய் காரில் சென்றால், நடந்து சென்றால், பேசினால் என எல்லாவற்றிலும் அந்த தொலைக்காட்சி குற்றம் கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருப்பதாக விஜய் ரசிகர்கள் குமுறுகிறார்கள்.

பொக்கிஷம் படத்தில் நடிக்க தயாராக இருந்த விஜய்! வாய்ப்பு பறிபோனது எப்படி?

நேற்று விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் , இயக்க பெண் நிர்வாகியிடம் தலைவன் பெயரை சொல்லக்கூடாது, தளபதி என்று மட்டும் தான் சொல்ல வேண்டும் என கூறினார். இந்த விவகாரம் ஊடகங்களில் பெரிய அளவில் விவாதமாக வெடித்து வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தை ஊதிவிட்டதே அந்த பிரபல தொலைக்காட்சி தான் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

மேலும் நடந்த விஜய் மக்கள் இயக்க மீட்டிங்கில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் எதார்த்தமாக பேசிய பல விஷயங்களை வேண்டுமென்றே கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பி வந்ததாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். விஜய் அரசியலுக்கு வருவது பிடிக்காமல் அவரையே பிடித்து இதுபோன்ற விமர்சனங்களை அந்த தொலைக்காட்சி செய்வதாகவும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே புளுசட்டை மாறன் இந்த விவகாரம் குறித்து நேற்று வெளியிட்ட ட்வீட் பதிவில், “அமெரிக்க அதிபராக இருந்தாலும் அங்கே அவரை பெயர் சொல்லித்தான் அழைக்கிறார்கள். உலகின் பல நாடுகளிலும் இப்படித்தான். ஆனால் தமிழகத்தில் இந்த அடைமொழி காமெடிகள் உச்சத்தில் உள்ளன.

அப்படியெனில் ‘தளபதி’ மக்கள் இயக்கமென்று மாற்றவும். கெஜட்டில் கூட தளபதி என்று அவர் மாற்றிவிட்டால் சிறப்பாக இருக்கும். யார் எப்படி அழைத்தாலும்.. பொதுமக்களை பொறுத்தவரை ரஜினி, கமல், விஜய், அஜித் மட்டுமே. உங்களையும் இனி ஆனந்த் என்று அழைக்காமல் Bussy சார் என்றுதான் அழைக்க வேண்டுமா? அந்த உத்தரவையும் போட்டுவிட்டால் நன்று. ஏனெனில்.. விஜய்யை விட உங்களைத்தான் இந்த ரசிகர் மன்றத்தினர் அடிக்கடி சந்திக்கிறார்கள். உங்கள் அடைமொழி என்ன? சின்ன தளபதியா? தளபதியின் தளபதியா? என்று கேட்டுள்ளார் புளு சட்டை மாறன்.