அந்த அஜித் பட கதையில நீங்க நடிக்குறீங்களா.. நல்லாவே இருக்காது.. ரஜினியிடம் நேரடியாக சொன்ன பிரபல இயக்குனர்..

By Ajith V

Published:

இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் என்றால் நிச்சயம் ரஜினிகாந்தை மட்டும் தான் சொல்ல முடியும். இதற்கு காரணம், பாலிவுட்டில் பெரிய நட்சத்திரங்களாக இருக்கும் ஷாருக்கான், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் கூட ரஜினிகாந்தை இந்தியாவின் சூப்பர்ஸ்டார் என்று தான் குறிப்பிடுவார்கள். அந்த அளவுக்கு ஏறக்குறைய 48 ஆண்டுகளாக தனி சாம்ராஜ்ஜியமே நடத்தி வருகிறார் ரஜினிகாந்த்.

பாலச்சந்தர் மூலம் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க ஆரம்பித்த ரஜினிகாந்த், துணை கதாபாத்திரங்களில் நடித்த போது சில அவமானங்களையும் சந்தித்திருந்தார். இதன் பின்னர், தனது கருப்பு நிறம், ஸ்டைல் மூலமே தன்னை விமர்சித்தவர்களுக்கு சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்று பதிலடியையும் ரஜினிகாந்த் கொடுத்திருந்தார்.

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு போட்டி கமல்ஹாசன் என்ற கருத்து பரவலாக இருந்தாலும் அவர்கள் இருவரும் சிறந்த நண்பர்களாக தான் இருந்து வருகின்றனர். சொல்லப்போனால் ரஜினிகாந்தின் முதல் படமான் அபூர்வ ராகங்கள் படத்தில் கூட கமல் இணைந்து நடித்திருப்பார். மேலும், இத்தனை ஆண்டுகளில் ஏறக்குறைய நான்கு தலைமுறை நடிகர்களை பார்த்தாகி விட்ட போதிலும் ரஜினியின் சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்ப எந்த நடிகராலும் முடியவில்லை.

சமீபத்தில் கூட ரஜினியின் சில படங்கள் தோல்வி அடைந்த போது அவர் இனிமேல் அவ்ளோ தான் என்றும் சூப்பர்ஸ்டார் இனி அவர் இல்லை என்றும் விமர்சனம் இருந்தது. ஆனால், இவை அனைத்திற்கும் ஜெயிலர் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றி மூலம் பதில் சொல்லி இருப்பார் ரஜினிகாந்த். அடுத்ததாக த. ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் நடித்த படத்தில் தான் நடித்தால் எப்படி இருக்கும் என்பது பற்றி பிரபல இயக்குனரிடம் ரஜினி ஒருமுறை கேட்டுள்ளார். லிங்குசாமி இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் ‘ஜி’. இந்த படம் தயாராவதற்கு முன்பாக ரஜினியை லிங்குசாமி சந்தித்திருந்தார். அடுத்த படம் பற்றி ரஜினி கேட்க, ஜி படத்தின் கதையையும் லிங்குசாமி கூறி உள்ளார்.

இதனை கேட்டதும், அந்த கதையில் நான் நடித்தால் எப்படி இருக்கும் என ரஜினி கேட்டு அதற்கான ஒன்லைன் ஒன்றையும் சொல்லி இருக்கிறார். கல்லூரி கதாபாத்திரம், அரசியல் என இருந்ததால் ‘நல்லா இருக்காது’ என லிங்குசாமி நேரடியாக ரஜினியிடம் கூறிவிட்டார். இனிமேல் நீங்கள் அரசியல் கதை இல்லாமல் முத்து, அண்ணாமலை போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்றும் லிங்குசாமி ரஜினியிடம் அறிவுறுத்தி உள்ளார். இதன் பின்னர், ஜி திரைப்படம் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.