கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க 3 கோடி கேட்ட பூஜா ஹெக்டெ !!

பூஜா ஹெக்டெ  இந்தியத் திரைப்பட நடிகையாவார், இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இவர்,  தமிழ்…

பூஜா ஹெக்டெ  இந்தியத் திரைப்பட நடிகையாவார், இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இவர்,  தமிழ் சினிமாவில்  முகமூடி  என்ற திரைப்படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார்.

அதன்பின்னர் ஒகா லைலா கொசம், முகுந்தா என்ற 2 தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் ஹிட் ஆக இந்தியில் மொகஞ்சதாரோ என்னும் படத்தின்மூலம் கால் பதித்தார்.

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து படவாய்ப்புகளைப் பெற்றுவரும் இவர், மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர், ஜான் என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

20e577e37243b6139e1638175b417715

அதேபோல் சூர்யாவின் அருவா படத்தில் இவர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாகப் பேசப்பட்ட நிலையில், ராஷி கன்னாதான் ஹீரோயின் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ரூ.2 கோடி சம்பளம் பெற்றுவரும் பூஜா தற்போது மீண்டும் இந்தியில் சல்மான்கான் ஜோடியாக கபி ஈத் கபி என்ற படத்தில் நடிக்க தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.

மேலும் நெருக்கமான கவர்ச்சி காட்சிகளில் நடிக்க ரூ.3 கோடி சம்பளம் வேண்டும் என்று பூஜா ஹெக்டே கேட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன