உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 39 லட்சத்தினை நெருங்க உள்ளது, உயிர் இழப்பு 3 லட்சத்தினைத் தொட்டு விடுவதற்குள் எப்படியும் கட்டுப்படுத்த வேண்டும் என்று உலகநாடுகள் பலவும் போராடுகின்றன.
அந்தவகையில் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் வைக்க இந்தியாவில் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி மே 17 வரை ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்றொரு புறம் இந்தியாவில் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என 3 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதாவது தமிழகத்தில் 7 ஆம் தேதி முதல் சில நிபந்தனைகளுடன் மதுக்கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் இந்த முடிவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமாப் பிரபலங்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கமல் ஹாசன் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது வலுவான கண்டனங்களைத் தெரிவித்து உள்ளனர். அந்த வகையில் கவிப் பேரரசு வைர முத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது குறித்து ஒரு கவிதையைப் பதிவிட்டு அவரது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
“மது என்பது –
அரசுக்கு வரவு;
சந்தோஷக் குத்தகை;
சாவின் ஒத்திகை.” என்பது போல் பதிவிட்டுள்ளார்.