பிச்சைக்காரன் பார்ட் 2 கதை ரெடி.. விஜய் ஆண்டனி தகவல்!!

நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், எடிட்டர், நடிகர் எனப் பல அவதாரங்கள் எடுத்து சினிமாவில் பிசியாக இருந்துவருகிறார். இவர் அவ்வப்போது சிறப்பு விருந்தினராகப் படங்களில் நடித்தநிலையில், நான் என்ற படத்தின்மூலம் நடிகரானார்.…

நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், எடிட்டர், நடிகர் எனப் பல அவதாரங்கள் எடுத்து சினிமாவில் பிசியாக இருந்துவருகிறார். இவர் அவ்வப்போது சிறப்பு விருந்தினராகப் படங்களில் நடித்தநிலையில், நான் என்ற படத்தின்மூலம் நடிகரானார்.

முதல் படமே செம ஹிட் ஆக தொடர் வாய்ப்புகளைப் பெற்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவர் நான், சலீம், இந்தியா- பாகிஸ்தான், பிச்சைக்காரன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன், கொலைகாரன், சைத்தான், எமன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தமிழரசன், அக்னிச் சிறகுகள், காக்கி போன்ற படங்களில் நடித்துவருகிறார். விஜய் ஆண்டனி ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில், சமீபத்தில் தான் நடித்து வரும் படங்களின் சம்பளத் தொகையில் 25% சதவீதம் குறைத்தார்.

7eb222d597f2759c57d21d51b4681082

மேலும் தற்போது பிச்சைக்கார  படத்தின் 2 ஆம் பாகத்தின் கதையினை எழுதி வருவதாகக் கூறியுள்ளார். அவர் கூறும்போது, “லாக்டவுனில் வீட்டில் இருந்துவரும் நான் பிச்சைக்காரன் பார்ட் 2 கதையினை எழுதி வருகிறேன். பிச்சைக்காரன் முதல் பாகத்தை இயக்கிய சசி மிகவும் பிசியாக இருப்பதால், அவரிடம் அனுமதி பெற்று நான் பார்ட் 2 க்கான கதையினை எழுதுகிறேன்.

இதனை திரையில் கொண்டுவர வேண்டும் என்பது என் ஆசை, கையில் உள்ள படங்களை முடித்துக் கொண்டு பிச்சைக்காரன் பார்ட் 2 வில் களம் இறங்குவேன்” என்று கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன