வேட்டையாடு விளையாடு, தசாவதாரம் என இருபடங்களில் இணைந்து உலகநாயகன் கமலுடன் இணைந்து பணியாற்றியவர் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். மருதநாயகம் படத்திலும் அசிஸ்டண்ட் கேமராமேனாக ஒர்க் பண்ணியுள்ளார். தற்போது இந்தியன் 2 படத்திலும் இவர் தான் ஒளிப்பதிவாளர். என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…
வாலி படத்துல முதல் ரெண்டு நாள் நான் தான் சூட் பண்ணினேன். அப்புறம் பெப்சி பிரச்சனையால நான் தொடர்ந்து வேலை செய்ய முடில. வீட்ல இருந்துட்டேன்.
அப்போ சூர்யா சார் வீட்டுக்கு வந்து ரொம்ப நல்லா வந்துருக்குன்னு பாராட்டுனாரு. அஜீத் சார் எங்கிட்ட சொன்னது இதுதான். நீ இந்த உலகத்துல யாரையும் பார்த்து பயப்படாத ரவி. பயந்தீங்கன்னா வாழ முடியாதுன்னு சொன்னாரு.
எனக்கு ஷங்கர் சார் படங்கள்ல எல்லா படங்களும் பிடிக்கும். ஒண்ணு முதல்வன். ரெண்டு இந்தியன். எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்த படம் இந்தியன். இதோட 2வது பாகம் இது. முதல் பாகத்தை விட 100 சதவீதம் பெட்டரான படம். ஏன்னா எனக்கு கதை தெரியும். 3மணி நேர கதையைக் கேட்டதுமே ரொம்ப ஆச்சரியப்பட்டேன்.
எனக்கு மூணு மணி நேரம் ஷங்கர் சார் கதை சொன்னார். ஷார்ட் பை ஷார்ட்டா கதை சொன்னாரு. ரொம்ப பக்கவான ஸ்கிரிப்ட்.
கமல் சார் வந்து ஒங்களுக்கு ஒரு விஷயம் தெரிதுன்னா அதுல தலையிட மாட்டாரு. தெரிலன்னா சொல்லிக் கொடுப்பாரு. ஆனா ஒரு பிரேமுக்குள்ள ஒரு விஷயம் தப்பா இருந்துச்சுன்னா தப்பா இருக்குன்னு சொல்வாரு.
அதே நேரத்துல நாம தப்பா செஞ்சா கண்டுபிடிச்சிருவாரு. அவருக்கு முன்னாடி நடிக்க முடியாது. வேலை தெரியற மாதிரி நாம நடிக்க முடியாது. கண்டுபிடிச்சிருவாரு.
ஒரு சின்ன இன்சிடண்ட். வேட்டையாடு விளையாடு படத்துல மஞ்சள் வெயில் மாலையிலே சாங் சூட் பண்ணினோம். படத்தைப் பார்க்கும் போது ஆரஞ்ச் கலர் லைட் ஸ்டெப்ல இருக்கும். அப்போ கௌதம் சார் சொன்னாரு. ஷர்ட் கலர் மாறியிருக்கேன்னாரு. உடனே நான் டான்ஸ் மாஸ்டர் பிருந்தாகிட்ட சொன்னேன்.
என்ன மாஸ்டர் கௌதம் சாரு கமல் சாரோட ஷர்ட மாத்தணும்னு சொல்றாங்க…ன்னு சொன்னேன். அதுக்கு அவங்க ஷில் அவுட் பண்ணிடலாம்னு சொன்னாங்க.
அதை 200 அடி தூரத்துல இருந்து கமல் சரியா கவனிச்சாரு. அதான் ஷில் அவுட் பண்ணிடலாம்னு சொல்லிட்டாங்கள்லன்னாரு. அப்புறம் ஷார்ட் முடிஞ்ச பிறகு கமல் சார் சொன்னாரு. நான் போயி ஷர்ட் மாத்திட்டு வந்தா அங்கே லைட் போயிடும்னாரு. அந்த அளவு பிரில்லியண்ட்.
கமல் சார் உண்மையிலேயே ஒரு பெரிய பல்கலைக்கழகம் தான். அவரால தான் நான் இந்த இடத்துக்கே வந்தேன்.