திருப்பாச்சில சந்தனம் பூசி அவரு நடிச்ச சீன்.. சாதாரண விஷயத்துக்காக விஜய் எடுத்த பெரிய ரிஸ்க்.. ரகசியம் உடைத்த பேரரசு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் நடிப்பில் கடைசியாக கோட் திரைப்படம் வெளியாகி இருந்தது. தனது அரசியல் பயணம் காரணமாக இன்னும் ஒரே ஒரு படத்தில் நிறைய விஜய் நடிக்க உள்ள…

perarasu about vijay in tirupachi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் நடிப்பில் கடைசியாக கோட் திரைப்படம் வெளியாகி ருந்தது. தனது அரசியல் பயணம் காரணமாக இன்னும் ஒரே ஒரு படத்தில் நிறைய விஜய் நடிக்க உள்ள சூழலில் அதனை ஹெச். வினோத் இயக்க உள்ளார். விஜய்யின் கடைசி படம் என்பதால் அதனை கொண்டாடவும் ரசிகர்கள் தயாராகி வரும் சூழலில், இன்னொரு பக்கம் அவரோ அரசியல் என்ட்ரிக்கும் தயாராகி வருகிறார்.

நடிகர் விஜய் தற்போது நடிக்கும் திரைப்படங்கள் கமர்சியல் வகை என்றாலும் அதில் ஒவ்வொன்றிலும் ஏதாவது புதுமையான விஷயங்கள் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அதற்கு முன்பாக விஜய் தொடர்ந்து கமர்சியல் திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் அவன் அனைத்துமே ஆக்சன் ஜானர் வகையில் தான் அமைந்திருந்தது.

விஜய் நடிப்பில் உருவான இரண்டு கமர்சியல் ஆக்சன் திரைப்படங்களில் பலருக்கும் பேவரைட் ஆக இருந்து வரும் திரைப்படங்கள் தான் திருப்பாச்சி மற்றும் சிவகாசி ஆகியவை. இந்த இரண்டு திரைப்படங்களை பேரரசு இயக்கி இருந்த சூழலில், இரண்டுமே அந்த சமயத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருந்தது.

திருப்பாச்சி திரைப்படம் அண்ணன்தங்கை பாசத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்த சூழலில், சிவகாசி திரைப்படம் குடும்பத்தின் ஒற்றுமையை உணர்த்தும் கதையம்சம் கொண்ட திரைப்படமாகவும் உருவாகி இருந்தது. இதில் பலரையும் திருப்பாச்சி படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் எமோஷனல் காட்சிகள் நெகிழ வைத்திருந்தது.

அதிலும் ஒரு காட்சியில் நடிகர் விஜய் முகம் முழுக்க சந்தானம் பூசிக் கொண்டு ஒரு சண்டைக் கட்சியில் நடித்திருப்பார். இந்த காட்சியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சூழலில், அதில் விஜய் செய்த அர்ப்பணிப்பு பற்றி இயக்குனர் பேரரசு சில கருத்துக்களை ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

சந்தனத்தை மேக்கப் மாதிரி போட்டுக் கொண்டதால் அது மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். ஆனாலும், அதே மேக்கப் அழியாமல் அப்படியே தான் சாப்பிடவும் செய்வார் விஜய். ஷூட்டிங் முடிந்த பிறகு மட்டும் தான் அதனை அவர் மாற்றுவார். இரண்டு நாட்கள் அந்த மேக்கப்பை போட்டுக் கொண்டதால், விஜய்க்கு சளி வந்து விட்டது.

அது மட்டுமில்லாமல், அவருடைய குரலும் மாறி போய் விட்டது. எனக்கு சரியாக படாமல் போக, விஜய்யோபரவாயில்ல, இப்படியே முடித்து விடலாம்என கூறி விட்டார். அடுத்த 3 நாட்கள் சந்தனத்தை போட்டு தான் ஷூட்டிங் நடத்தினோம். அந்த 3 தினங்களும் சளியோடு மிகவும் கஷ்டப்பட்டு தான் அந்த காட்சியில் விஜய் நடித்து கொடுத்தார்.

சந்தானம் பூசிய கொஞ்ச நேரத்தில் அது வெடிக்க ஆரம்பித்து விடும். இன்னும் கொஞ்ச நேரம் போனால் ஊர்ந்து விடும். அதன் பின்னர் காயாமல் இருக்க தண்ணீர் ஸ்ப்ரே செய்து கொண்டிருக்க வேண்டும். மேக்கப் போட்டதை விட மேக்கப் மேனுக்கு இந்த வேலை தான் கஷ்டமாக இருந்தது. அது காயாமல் பார்த்து கொள்வதே பெரிய சவாலாக இருந்ததுஎன பேரரசு கூறி உள்ளார்.