ரியோ ராஜை வைத்து நெஞ்சம் உண்டு நேர்மை என்று ஓடு ராஜா அவளுக்கு சம்பந்தப்பட்டபடத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் அந்த படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து இயக்கியுள்ள பிடி சார் படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா என்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய கார்த்திக் வேணுகோபாலன் அனிகாவின் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.
பிடி சார் டிரெய்லர் ரிலீஸ்:
ஆர்ஜே விக்னேஷ்காந்த் உடன் இணைந்து ஸ்மைல் சேட்டை, பிளாக் ஷீப் எனும் யூடியூப் சேனல்கள் பணிபுரிந்து வந்த கார்த்திக் வேணுகோபாலன் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ ராஜை வைத்து கடந்த 2019 ஆம் ஆண்டு நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தை இயக்கியிருந்தார். யூடியூப் பிரபலங்கள் பலர் நடித்த அந்த திரைப்படம் சுமாராக ஓடியது. அந்த படத்தின் கதை நல்லாவே இருந்ததாக பலராலும் பாராட்டுக்களை பெற்றது. ஆனால், வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றியைத் தரவில்லை.
ஹிப்ஹாப் தமிழா ஆதியை வைத்து தற்போது பிடி சார் படத்தை இயக்கியுள்ள கார்த்திக் வேணுகோபாலன் வரும் மே 24-ஆம் தேதி ரிலீசாக போகிறது. அதனை முன்னிட்டு ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபு, தியாகராஜன், பாக்யராஜ், பாண்டியராஜன், பட்டிமன்ற ராஜா, முனிஷ் காந்த், ஹிப்ஹாப் ஆதி, காஷ்மிரா, அனிகா சுரேந்திரன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தல பொண்ணு:
அரண்மனை 4 படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்த அனைத்து பாடல்களும் வெற்றி பெற்ற நிலையில், அதே அளவுக்கான பாடல்கள் டிடி சார் படத்திலும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் கிராமங்களில் இப்பவும் தல பொண்ணாகவே அனிகா சுரேந்திரனை பார்த்து வருகின்றனர். இந்த படம் வெளியான பின்னர், அவர் எந்த அளவுக்கு மெச்சூரிட்டியான நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் புரிய வரும் என்று கூறியுள்ளார்.
பள்ளிகளில் நடக்கும் பாலியல் தொல்லை பிரச்சனைகள் குறித்து இந்த பிடி சார் படத்தில் முக்கிய கருத்துடன் மாணவர்களுக்கான படமாக இயக்கி இருக்கிறார் கார்த்திக் வேணுகோபாலன்.