Bigg Boss Tamil Season 8 : முதல் நாள்ல இருந்தே முத்துவுக்கு இப்படித்தான் நடக்குது.. கலங்கி பேசிய பவித்ரா..

Pavithra and Muthu : தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் இந்த வாரம் மிக முக்கியமான வாரம் என குறிப்பிடுவதைத் தாண்டி பல மோதல்களும் மிக நெருக்கமாக இருந்த போட்டியாளர்களுக்கு இடையே…

Pavithra about Muthu

Pavithra and Muthu : தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் இந்த வாரம் மிக முக்கியமான வாரம் என குறிப்பிடுவதைத் தாண்டி பல மோதல்களும் மிக நெருக்கமாக இருந்த போட்டியாளர்களுக்கு இடையே ஆரம்பித்துள்ளதும் அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொருவரும் முட்டி மோதிக் கொண்டு இறுதிச்சுற்றுக்கு சென்றுவிட வேண்டும் என்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் இந்த வாரத்தில் இருந்து ஒருவருக்கு மட்டுமே ஃபைனலில் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதால் பத்து பேரும் எப்படியாவது வென்று விட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுவதால் மோதல்களும் அதிகமாக உள்ளது. இனிவரும் நாட்களில் யார் வேண்டுமானாலும் சிறப்பாக விளையாடினாலும் மக்களின் வாக்களிப்பு மூலம் யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் என்பதால் அனைவரும் தங்களை தற்காத்துக் கொள்வதிலும் கவனமாக இருந்து வருகின்றனர்.

இதற்கிடையே ரயான் மற்றும் முத்துக்குமரன் ஆகியோரிடையே தொடர்ந்து பல நேரங்களில் சண்டை போட்டு வருவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. முத்துவும் மற்ற அனைவரிடமும் சேர்ந்து ஒரு அணியாக தன்னை எதிர்த்து ஆடுவதாகவும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார் ரயான். இதேபோல பேச்சாளர்களுக்கான போட்டியாக பிக் பாஸ் வீடு மாறி விட்டதாகவும், கேம் மூலம் ஜெயிக்க முடியாமல் இங்கே பேசி தான் இனிமேல் ஜெயிக்க முடியும் என்றும் மஞ்சரி மற்றும் முத்துக்குமரன் ஆகியோரை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியிருந்தார் ரயான்.

இப்படி கடந்த ஒரு வாரமாக ரயானின் விளையாட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களுக்கே பிடிக்காமல் போன நிலையில் சமீபத்திலும் சில சம்பவங்கள் அப்படி அரங்கேறி இருந்தது. இந்த நிலையில் தான் அருண் பிரசாத்தின் புள்ளிகளை அனைவரும் பிரித்துக் கொடுப்பது தொடர்பாக ஒரு உரையாடல் நடக்க இதில் முத்துக்குமரனை அனைத்து போட்டியாளர்களும் எதிர்த்து நிற்பதாக தெரிகிறது.

ஆரம்பத்தில் இருந்தே முத்துக்குமரன் சொல்லும் விஷயங்களை பலர் ஏற்றுக் கொள்ளாமல் மாறி மாறி சண்டை போட்டு வரும் நிலையில் அது பற்றி பவித்ராவும் சில கருத்துக்களை தற்போது ஜாக்குலினுடன் தெரிவித்துள்ளார். “இது இன்று நேற்று நடக்கவில்லை. முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் வீட்டிற்குள் இப்படித்தான் நடக்கிறது.

கடைசி நிமிடத்தில் முத்து அவுட்டாவது இங்கே வாடிக்கையாக இருந்து வருகிறது.எப்போதும் இப்படித்தான் நடக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சனை நடந்தால் முத்துவை முன்பு நிறுத்தி விடுவார்கள். அத்தனை திட்டும் முத்துவுக்கு தான் கிடைக்கும். ஆனால் அந்த தவறு செய்ததில் அனைவருக்குமே பங்கு இருக்கும்” என முத்துவுக்கு ஆதரவாக பவித்ரா தெரிவித்துள்ளார்.