Parvathy Emotional For Kamrudin : தமிழில் இதுவரை 8 பிக் பாஸ் சீசன்கள் நடந்து முடிந்து விட்டது. தற்போது 9 வது சீசன் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், இதுவரையில் இல்லாத அளவுக்கான மோசமான சீசனாகவும் இது இருந்து வருகிறது. முந்தைய சீசனும் ஆரம்பத்தில் மோசமாக இருக்க, 2 வாரங்களில் போட்டியாளர்கள் மாறி தங்கள் திறனை நிரூபிக்கத் தொடங்கி விட்டார்கள்.
ஆனால் 9 வது சீசன் ஆரம்பித்து சுமார் 30 நாட்களை கடந்த போதிலும் பல போட்டியாளர்கள் எந்த திறனையும் வெளிப்படுத்தாமல், எப்படி ஆட வேண்டும் என்றும் தெரியாமல் ஒற்றுமையாக இருக்கவே திணறி வருகின்றனர். Wild Card போட்டியாளர்கள் வரவுக்கு பின்னர் மாற்றம் நடக்கும் என எதிர்பார்த்தால் அதுவும் நேர்மாறாக தான் போய் கொண்டுள்ளது.
யாரும் காப்பாத்த முடியாது..
அப்படி நுழைந்த போட்டியாளர்கள் தாங்கள் தான் சிறந்தவர்கள் என காண்பிக்க நினைக்க, அதுவே பழைய போட்டியாளர்கள் மத்தியில் சண்டையை உருவாக்கி உள்ளது. இனிமேல் இந்த சீசனை காப்பாற்ற முடியாது என்ற ஒரு சூழல் இருக்கும் நிலையில், டாஸ்க் அல்லது போட்டியாளர்களே புரிந்து கொண்டு இதை சிறப்பாக ஆடினால் தான் இந்த சீசன் தப்பிக்க முடியும் என்ற நிலை உள்ளது.
இதற்கு மத்தியில், கம்ருதீனை நினைத்து மற்ற போட்டியாளர்களிடம் கண்ணீர் விடுகிறார் பார்வதி. ஆர்மபத்தில் திவாகர் மற்றும் பார்வதி ஆகியோர் நட்பாக இருக்க, இவர்களுடன் இணைந்தார் கம்ருதீன். தொடர்ந்து பார்வதி மற்றும் கம்ருதீன் இன்னும் நெருக்கமாக, மாறி மாறி பிரச்சனை வந்தால் ஆதரவு தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
கம்ருதீனுக்கு ஒன்னும் ஆகக்கூடாது..
இதற்கிடையே தான் திவாகரிடம் கம்ருதீன் தன்னிடம் எல்லை மீறுவதாக தெரிவித்தார் பார்வதி. அவனிடமும் எல்லையை கடைபிடிக்க வேண்டும் என பார்வதி திவாகரிடம் சொல்கிறார். கம்ருதீன் பற்றி பார்வதி இப்படி பேசியதை பிரஜின் உள்ளே வந்ததும் பற்ற வைத்தார். இதனால், கம்ருதீன் ஆவேசப்பட்டு பார்வதியிடம் சண்டை போட, பெரிய பிரச்சனையே உருவானது.
இதற்கு மத்தியில், சமீபத்தில் கம்ருதீன் பற்றி தான் பேசியதை நினைத்து மனம் வருந்தியுள்ளார் பார்வதி. அமித்திடம் இதுபற்றி பேசும் பார்வதி, ‘அந்த நேரத்துல கோபத்துல ஏதோ சொல்லிட்டேன். அப்புறமா அது புரிஞ்சப்போ என்னடான்னு இருந்துச்சு.. என்னால அவன் இந்த வாரம் வெளிய மட்டும் போயிடக்கூடாது. நான் இப்படி சொல்லி அவனுக்கு அப்படி ஒரு மோசமான பெயர் வெளியே வந்துடக்கூடாது‘ என்று சொல்லி மனம் கலங்குகிறார்.

இதே போல, திவாகரிடமும் கண் கலங்கி பேசும் பார்வதி, ‘கம்ருதீனுக்கு ஒண்ணுன்னா நான் எப்பவும் கூட நிப்பேன். நான் கோபத்துல சொன்ன ஒரு விஷயம் அவனுக்கு எங்கயும் பாதகமா மாறிடக்கூடாது‘ என சொல்லும் பார்வதி, கம்ருதீனிடமும் மன்னிப்பு கேட்கிறார்.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

