Biggboss Tamil Season 9: திவாகரை ஓங்கி காலால் எட்டி உதைத்த பார்வதி.. அடுத்த நிமிடமே ‘ல்வ’ புரபோஸ் செய்த பாரு.. சக போட்டியாளரை ‘நடிப்பு அரக்கன்’ என பாராட்டிய திவாகர்.. என்னடா நடக்குது பிக்பாஸ் வீட்டில்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று நான்காவது நாளாக விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு நாளும் வெளியாகும் ப்ரோமோ வீடியோக்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும்…

diwakar paru

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று நான்காவது நாளாக விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு நாளும் வெளியாகும் ப்ரோமோ வீடியோக்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளன.

இந்த நிலையில், ‘நடிப்பு அரக்கன்’ என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் திவாகர், சக போட்டியாளர்களுக்கு நடிப்பு சொல்லித் தரும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதனை அடுத்து, திவாகர் அனைவருக்கும் நடிப்பு சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கும்போது பார்வதியின் முறை வருகிறது.

அப்போது பார்வதி வசனம் பேசிக்கொண்டே திடீரென தனது காலால் திவாகரை ஓங்கி மிதிக்கிறார். திவாகர் நிலைதடுமாறி கீழே விழும் காட்சிகள் இன்றைய ப்ரோமோவில் உள்ளன. ஆனால், அடுத்த நிமிடமே ’என்றைக்கும் நான் தான் உனக்கு லவ்” என்ற வசனத்தை பாரு பேசியதை அடுத்து, திவாகர் பார்வதியின் நடிப்பை பாராட்டினார்.

அதன் பிறகு நடிக்க வந்த விக்ரம், வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை ஆக்ரோஷமாக பேச, அதற்கு “நடிப்பு அரக்கன் விக்ரம் தான்” என்று திவாகர் பாராட்டு தெரிவித்தார். ஏற்கனவே அவர் வெளியில் தன்னைத்தானே ‘நடிப்பு அரக்கன்’ என்று பட்டம் சூட்டிக்கொண்ட நிலையில், தற்போது அவரே இன்னொருவரை நடிப்பு அரக்கன் என்று கூறியது காமெடியின் உச்சமாக உள்ளது.

இந்த வீடியோவுக்கு பார்வையாளர்கள் பலர் சில கேலியான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இதுவரை திவாகர் மட்டும்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை காப்பாற்றிக் கொண்டு வருகிறார் என்றும், அவர்தான் கண்டன்ட் கொடுத்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இதுவரை நடந்த அனைத்து சீசன்களிலும் பிக் பாஸ்-ஸிடம் தான் போட்டியாளர்கள் மாட்டிக்கொண்டு திணறுவார்கள். ஆனால், இந்த சீசனில் முதல்முறையாக திவாகரிடம் பிக் பாஸ் மாட்டிக்கொண்டிருக்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

திவாகர் ஒரு லூசு மாதிரி தெரிந்தாலும் நல்ல மனிதர் என்றும், கண்டிப்பாக அவர் ஃபேமஸ் ஆவதற்கு அவரது வெள்ளந்தியான மனம்தான் காரணம் என்றும் அவருக்கு ஆதரவாகவும் சில கருத்துகள் பதிவாகி வருகின்றன. ஒட்டுமொத்தமாக, திவாகர் ஒருவரால் மட்டுமே டி.ஆர்.பி-யில் இந்த நிகழ்ச்சி எகிறி கொண்டுள்ளதாக தெரிகிறது.