இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் நடிப்பில் கடந்த 2011ல் வெளிவந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். படத்தின் ஹீரோ கார்த்தி என்றாலும் படத்தின் பின்பகுதியில் வரும் சோழமன்னன் கதாபாத்திரம் அனைவரையும் வியக்க வைத்தது.
இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் சோழ மன்னன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தை சிலாகித்து ரசிகர் ஒருவர் மீண்டும் இது போல கதாபாத்திரத்தில் உங்களை பார்க்க வேண்டும் போல் உள்ளது என கூறியுள்ளார்.
அதற்கு பதில் கூறிய பார்த்திபன் செல்வபாரதி செல்வராகவனிடம் சொல்லுங்கள் என கூறியுள்ளார்.