பாரதிராஜா மீதிருந்த கோபம்.. அதே ரோஷத்தில் ரேவதியின் கன்னத்தில் அறைந்த பிரபல நடிகர்..

தமிழ் சினிமாவில் இன்று மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு இயக்குனர்கள் புதிதாக அறிமுகமாகி வருகிறார்கள். ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மனதை கவர்வார்களா என கேட்டால் நிச்சயம் சந்தேகம் தான்.…

Bharathiraja revathy and pandiyan

தமிழ் சினிமாவில் இன்று மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு இயக்குனர்கள் புதிதாக அறிமுகமாகி வருகிறார்கள். ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மனதை கவர்வார்களா என கேட்டால் நிச்சயம் சந்தேகம் தான். ஆனால், முன்பொரு காலத்தில் இயக்கும் திரைப்படங்களை எல்லாம் ஹிட்டாக மாற்றிய பல ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவிலும் நிறைய உள்ளனர்.

அந்த வகையில் மிக முக்கியமான இடத்தை ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிடித்திருந்தவர் தான் இயக்குனர் இமயம் பாரதிராஜா. கிராமத்து பின்னணி கொண்ட ஏராளமான திரைப்படங்களை இயக்கி உள்ள பாரதிராஜா, கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலருக்கும் நிறைய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும் 80 களில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராகவும் இருந்த பாரதிராஜா, மண் வாசனை மாறாமல் படங்களை எடுப்பதே அவரது டிரேட் மார்க்காக இருந்தது.

பல வருடங்களுக்கு முன்பாகவே தொடர்ந்து திரைப்படங்கள் இயக்குவதை குறைத்துக் கொண்ட பாரதிராஜா, வயதான குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அதிலும் குரங்கு பொம்மை, நம்ம வீட்டுப் பிள்ளை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பாரதிராஜா ஏற்று நடித்திருந்த கதாபாத்திரங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

அப்படி ஒரு சூழலில், பிரபல நடிகை ரேவதி, பாரதிராஜா இயக்கத்தில் அறிமுகமான சமயத்தில் நடந்த பரபரப்பு சம்பவம் தொடர்பான செய்தி பலரையும் அதிர்ச்சியுடன் பார்க்க வைத்துள்ளது. பொதுவாக தனது திரைப்படங்களில் அறிமுகமாகும் நடிகைகள் சிறப்பாக நடிப்புத் திறனை வெளிப்படுத்தாமல் போகும் பட்சத்தில் அவர்களை அடிப்பதை பாரதிராஜா வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான கேள்வி ஒன்று ரேவதியிடம் நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்டது. பாரதிராஜா இயக்கத்தில் உருவான மண்வாசனை திரைப்படத்தில் தான் ரேவதி நடிகையாக அறிமுகமாகி இருந்தார். இதில் அவருடன் பாண்டியராஜ் இணைந்து நடித்த நிலையில் இது பற்றி பேசிய ரேவதி, “அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சூட்டிங்கின் போது தான் நான் சரியாக கத்தவில்லை என பாரதிராஜாவிடம் அடி வாங்கியிருந்தேன்.

ஆனால் அவரிடம் அடி வாங்குவதற்கு முன்பாகவே பாண்டியனிடமிருந்து அந்த படத்திற்காக ஒரு அறை வாங்கி விட்டேன். மார்க்கெட் காட்சி ஒன்றில் அவர் என்னை கன்னத்தில் அடிப்பது போல படமாக்கப்பட்டது. ஆனால் பாண்டியனோ அடிப்பதற்கு பதிலாக எனது காதிலும், கன்னத்திலும் தொட்டது போல் இருக்க, கோபப்பட்ட பாரதிராஜா பளார் என அடிக்கும்படி கூறினார்.

அந்த சமயத்தில் பாண்டியனையும் கோபத்தில் பாரதிராஜா கன்னத்தில் அடிக்க அதே வேகத்தில் என்னையும் அவர் அடித்துவிட்டார். பாண்டியன் அடித்த அடியில் அவரின் நான்கு விரலும் என் முகத்தில் பதிந்து விட்டது. அந்த அடி வாங்கியதுமே ஒரு சில வினாடிகள் என்ன நடந்தது என்பது எனக்கு புரியவில்லை” என ரேவதி கூறியுள்ளார்.