இந்திய சினிமாவையே தனது ஸ்டைல் மற்றும் மாஸ் வசனங்கள் மூலம் ஐம்பது ஆண்டுகளாக ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஒரு நடிகர் சாதாரணமாக நடிக்கும் காட்சிகளை கூட தான் நடிக்கும் போது ஒரு படி மேலே சென்று தனது ஸ்டைல் மற்றும் மாஸான உடல் மொழியுடன் அதனை வேறு லெவலுக்கு எடுத்துச் செல்லும் திறன் படைத்த ரஜினிகாந்த், கடந்த 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற அரியணையில் மிக கம்பீரமாகவும் அமர்ந்து வருகிறார்.
லுடன் தனது திரை பயணத்தை ஆரம்பித்திருந்த ரஜினிகாந்த், ஒவ்வொரு திரைப்படத்திலும் மாசான வசனங்கள், ஸ்டைலான நடை, உடை, தலை முடியில் ஸ்டைல் காண்பிப்பது என ஒவ்வொன்றிலும் பலரையும் இன்ஸ்பயர் செய்தும் வருகிறார். 70 வயதை கடந்தாலும் இன்னும் ரஜினி தனது திரைப்படங்கள் மூலம் அதிக வசூலை அள்ளி சாதனை புரிந்து வரும் நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்திலும், இதனை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்திலும் அவர் நடிக்க உள்ளார்.
ஹே சூப்பர் ஸ்டாருடா..
2.0 திரைப்படத்திற்கு பிறகு வெளியான அவரது சில திரைப்படங்கள் பெரிய ஹிட் ஆகவில்லை என்றாலும் ஜெயிலர் படத்தின் வசூல் அனைத்திற்கும் ஈடு கட்டும் வகையில் அமைந்திருந்தது. தொடர்ந்து வேட்டையன் திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இன்னும் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்த நாளும் உலக அளவில் கொண்டாடப்பட உள்ளது.
இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் எங்கே பார்த்தாலும் ரஜினியின் திரைப்படங்கள் தொடர்பாக நிறைய தகவல்களையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில் படையப்பா திரைப்படம் படத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா பார்த்த சமயத்தில் என்ன தெரிவித்தார் என்பது பற்றி அந்த படத்தின் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் கூறிய கருத்து தற்போது அதிகம் கவனம் பெற்று வருகிறது.
நீலாம்பரி இன்ஸபிரேஷன் ஜெயலலிதா..
“வில்லியாக வரும் நீலாம்பரி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இன்ஸ்பிரேஷன் தான். ரஜினியும் அதற்கு சம்மதம் தெரிவிக்க, படம் வெளியான சமயத்தில் ஆல்பர்ட் தியேட்டரில் இருந்து பிரிண்ட் வாங்கி ஜெயலலிதா அவர்கள் தனது வீட்டிலேயே திரையிட்டு பார்க்கிறார். நீலாம்பரியே அவரது இன்ஸபிரேஷன் என்பதால் அவர் படம் பார்க்கிறார் என தெரிந்ததும் எனக்கும் பயமாக இருந்தது.
படம் பார்த்து விட்டு மறுநாள் வரையிலும் எதுவும் சொல்லவில்லை. இதன் பின்னர் ரஜினிகாந்தை சந்தித்த போது அவரிடம் முதல்வர் ஜெயலலிதா என்ன சொன்னார் என் கேட்டேன். அவருக்கு படம் மிகவும் பிடித்து விட்டதாகவும், அதிலும் நீலாம்பரி கதாபாத்திரம் அட்டகாசமாக இருந்ததாகவும் பாராட்டியதாக ரஜினி கூறினார். தன்னை போல ஒரு பவர் ஃபுல்லான பெண்ணை திரையில் பார்த்ததும் ஜெயலலிதா அவர்களுக்கு பிடித்து போய் விட்டது. அதை ஒரு கதையாக தானே பார்க்க வேண்டும்” என கே. எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார்.