ஜாஸி கிப்ட் இசைத்துறையின் ஒரு கிப்ட் என்றே சொல்லலாம். 2003ம் ஆண்டு சபலம் என்ற மலையாளப்படத்தில் அறிமுகமான ஜாஸி கிப்ட்க்கு தொடக்கம் எல்லாம் சுமார்தான். மூன்றாவதாக இவர் இசையமைத்த 4 தெ பீப்பிள் படம்தான் மலையாளத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்றது.
படத்தின் கதை சமூக அவலங்களை பேசுவதாக இருந்தாலும் இவரின் பாடல்கள் இவரை உச்சத்துக்கு கொண்டு சென்றன. குறிப்பாக இவர் பாடிய லஜ்ஜாவதியே பாடல் பல ரெக்கார்டு பிரேக்குகளை உடைத்தது.
மலையாள சினிமாவில் காலத்துக்கும் மறக்க முடியாத பாடலாக அது போய் விட்டது. அதில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரும் ஹிட். மலையாளத்தில் இவர் பாப்புலரானது மட்டுமல்லாமல் தமிழிலும் அதே நேரத்தில் பாப்புலரானார்.
4 தெ பீப்புள் படம் 4 ஸ்டூடண்ட் என்ற பெயரில் தமிழில் வந்தது. லஜ்ஜாவதியே, அன்னக்கிளி நீ வாடி, உன் விழிமுனை கத்தி எனை போன்ற பாடல்கள் பரபரப்பாக தமிழகத்திலும் பேசப்பட்டது.
அந்த நேரத்தில் இவர் கால்ஷீட் டைரி நிரம்பி வழிந்தது. இசையமைக்கவும் பாடவும் பலரும் அழைப்பு விடுத்தனர். அந்த நேரத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் அழைத்து தமிழில் பாட வைத்தார். அந்நியன் படத்தில் இடம்பெற்ற அண்டங்காக்கா கொண்டக்காரி பாடல் தமிழிலும் இவருக்கு நிலையான இடத்தை கொடுத்தது.
பல வெற்றிப்பாடல்களை இன்றளவும் பாடியும் இசையமைத்து வருகிறார் ஜாஸி கிஃப்ட்.