ஆச்சரியப்படுத்தும் ஓதி மலை முருகன்

குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற மொழிக்கேற்ப முருகப்பெருமான் அருள்பாலிக்கும் ஒரு மலைதான் ஓதிமலை. இங்குள்ள முருகன் ஐந்து தலை கொண்டவர். கோவை மாவட்டம் அன்னூர் அருகில் இக்கோவில் உள்ளது.…

குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற மொழிக்கேற்ப முருகப்பெருமான் அருள்பாலிக்கும் ஒரு மலைதான் ஓதிமலை.

cb5c03ba4bec2683cdc591906c53da6a-1

இங்குள்ள முருகன் ஐந்து தலை கொண்டவர். கோவை மாவட்டம் அன்னூர் அருகில் இக்கோவில் உள்ளது.

சிவனுக்கு உள்ள ஐந்து முகமான ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் ஆகியவை யே சிவ அம்சமான முருகனுக்கு இங்கு சிலையாக வடிக்கப்பட்டுள்ளது.

இவ்வூருக்கு பெயர் இரும்பறை என அழைக்கப்படுகிறது. பிரம்மதேவனுக்கு பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாததால் பிரம்மனை முருகன் சிறைப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இரும்பு சிறையில் முருகன் சிறை வைத்ததால் இவ்வூர் இரும்பறை என அழைக்கப்படுகிறது.

அந்த வரலாற்றின் அடிப்படையிலேயே இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது சில வருடங்கள் முன் இந்த முருகன் கோவிலில் உள்ள சிலைக்கு அர்ச்சகர் பூஜை செய்யும்போது முருகனின் கண் அசைவது போல் வந்திருந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

இக்கோவிலில் நம் கோரிக்கைக்காக பூக்கட்டி போட்டு அதன்படி நடக்கும் காரியங்கள் சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை.

கோவை- சத்தியமங்கலம் ரோட்டில் புளியம்பட்டி. அங்கிருந்து பிரியும் சாலையில் சென்றால் இந்த இரும்பறையை அடையலாம்.

இயற்கை எழில் சூழ்ந்த இம்மலையின் படிகளில் ஏறி சென்று முருகனை தரிசிக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன