சில படங்களைப் பார்க்கும் போது இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கன்னு ஒரு ஞாபகம் வரும். காரணம் கதையின் காட்சிகள் அப்படிப்பட்டவையாக இருக்கும்.
அந்த வகையில் ஒரே மாதிரியான கதை அம்சம் கொண்ட 2 படங்களைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம். ஆனால் அந்த இரண்டுமே சூப்பர்ஹிட் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? அதன் ரகசியம் என்ன? பார்க்கலாம் வாங்க…
ஒரு கதையில் நாயகனின் பெயர் டிஜிபி ராகவன். மற்றொரு கதையில் நாயகனின் பெயர் சத்யதேவ் ஐபிஎஸ்.
ராகவனுக்கு அறிமுகப்பாடல் கற்க கற்க. சத்யதேவிற்கு கடிகாரம் பார்த்தால் தவறு என்ற பாடல்.
ரௌடி, கேங்ஸ்டர்களை வேட்டையாடுவது போன்ற சண்டைக்காட்சிகளை இரு பாடல்களிலும் ஒரே இயக்குனர் பிரமாதப்படுத்தியுள்ளார்.
ஒரு படத்தில் ராகவனின் நெருங்கிய நண்பர் ஆரோக்கிய ராஜ். அவர் தான் பிரகாஷ்ராஜ். அவரது மகள் ராணி கடத்தப்படவே, அவளை ராகவன் காப்பாற்றுகிறார். இதுதான் கதை. அதே போல மற்றொரு படத்தில் சத்யதேவின் நண்பன் சரவணன் தன் மகள் நிலஞ்சனா கடத்தப்பட்டதாகவும், அவளைக் காப்பாற்ற சத்யதேவ் களம் இறங்குவதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆராதனாவிற்கு அதாவது ஜோதிகாவுக்கு கணவன் ஏமாற்றி விவாகரத்து ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கும். அதே போல மற்றொரு படத்தில் ஹேமானிகாவிற்கும் அதாவது திரிஷாவுக்கும் விவாகரத்து ஆகி பெண் குழந்தை இருக்கும். இருவரையுமே நம் நாயகர்கள் கரம்பிடிக்க நினைப்பார்கள்.
சத்யதேவுடன் ஏற்பட்ட பழைய பகையின் காரணமாக விக்டர் ஹேமானிகாவை கொலை செய்கிறான். அதே போல மற்றொரு படத்தில் அமுதன் ராகவனிடம் ஏற்பட்ட பகையின் காரணமாக ஆராதனாவை கொலை செய்கிறான். கிளைமாக்ஸில் ராகவன் ஆராதனாவைக் காப்பாற்றி மணம் செய்கிறான்.
இரு நாயகர்களுமே கைகளில் காப்பு, ஜீன்ஸ், ஷர்ட் அணிந்து அசத்தலாக வருகின்றனர். கதாநாயகியுடன் காபி ஷாப்பில் டேட்டிங். புல்லட்டில் புயலாக வரும் அழகு. வில்லன் அடியாட்களை ஆபாச வார்த்தைகளில் அர்ச்சனை செய்வது என ஒற்றுமைகள் நிறைய உள்ளன.
ரசிகர்களும் 2 படங்களையுமே தலையில் வைத்துக் கொண்டாடினர். இரு படங்களுக்கும் ஒரே இயக்குனர். அப்படின்னா அது என்னென்ன படங்கள்…? யார் அந்த டைரக்டர்? என்று கேள்வி எழுகிறதா?
வேட்டையாடு விளையாடு. என்னை அறிந்தால். இவை தான் அந்த 2 படங்கள். டைரக்டர் யாருன்னு இப்ப தெரிஞ்சிருக்குமே. ஆம். தற்போது தமிழ் சினிமாவில் வில்லனாகக் கலக்கிக் கொண்டு இருக்கும் கௌதம் மேனன்.