சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் ’நேர்கொண்டபார்வை’ திரைப்படத்திற்கு காஸ்ட்யூம் டிசைன் செய்த பூர்ணிமா என்பவர் பேசினார். அப்போது அவரிடம் ’நீங்கள் பணிபுரிந்த நடிகர்களில் வெகு எளிதாக பணிபுரிந்த நடிகர் யார்? என கேட்டதற்கு அவர் ’உண்மையாகவே அஜித் அவர்கள் தான் நேர்கொண்ட பார்வை படத்தில் அவருடன் பணிபுரிந்த போது தனக்கு மிகவும் எளிதாக இருந்ததாகவும் அதை அவரிடமே தான் பலமுறை கூறி இருப்பதாக கூறினார்
இந்த நிலையில் அஜீத் பெயரை பூர்ணிம கூறியவுடன் ரசிகர்கள் எழுப்பிய கைதட்டி ஒலி விண்ணை பிளந்தது. சில நிமிடங்கள் அந்த கைதட்டல் ஒலி ஓயவில்லை இதனை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தொகுப்பாளினியாக பணிபுரிந்த சாந்தனு மனிஅவி கீர்த்தி ’தலதளபதி பெயரைச் சொன்னாலே இப்படித்தான் சத்தம் கேட்கும், நீங்கள் தொடர்ந்து பேசுங்கள் என பூர்ணிமாவை கேட்டுக்கொண்டார். உண்மையில் தல அஜித்காகவே இந்த கைதட்டல் ஒலி ஓங்கி ஒலித்த நிலையில் அதில் தளபதி பெயரையும் கோர்த்துவிட்டார் கீர்த்தனா என்பது குறிப்பிடத்தக்கது
