பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா இவ்வளவு சாதனைகளுக்குச் சொந்தக்காரரா?

By John A

Published:

தமிழில் இருந்து இந்தித் திரைப்பட உலகுக்குச் சென்ற முதல் பெண் சூப்பர் ஸ்டாராகவும், அன்றைய இந்திய இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும் திகழ்ந்தவர் வைஜெயந்தி மாலா! சிறந்த நடிகை, புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்தவர்!

தலைசிறந்த நாட்டியத் தாரகையான வைஜெயந்தி மாலா சாஸ்திரீய சங்கீதத்தின் சங்கதிகளை அறிந்த சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞரும் கூட. தன்னுடைய 13-வது வயதில் தனது அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். 1941-ம் ஆண்டு வெளியான ‘ரிஷ்யசிருங்கர்’ திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார். 1943-ம் ஆண்டு வெளிவந்த ‘மங்கம்மா சபதம்’ திரைப்படம், வசுந்தராதேவிக்கு வான் எட்டும் புகழ் தந்தது.

1951-ம் ஆண்டு ‘வாழ்க்கை’ படத்தை, ‘பஹார்’ என்று இந்தியில் எடுக்க அதற்காக முறைப்படி இந்தி பேச எழுதக் கற்றுக் கொண்டார். அதனால் முதல் இந்திப் படத்தில் இருந்தே இவரே தனது படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் இவரும் பத்மினியும் போட்டிபோட்டு நடனமாடும் காட்சி இன்றும் டான்ஸ் மாஸ்டர்களுக்கே சவால்விடும் நடனங்களில் ஒன்று. பத்மினிக்கும் சரி… வைஜயந்தி மாலாவும் சரி, இருவருக்கும் பரத நாட்டியத் திறமையை முழுவதுமாக வெளிக்கொண்டுவர அற்புதமான வாய்ப்பாக அந்தக் காட்சி அமைந்தது. இந்தப் படம் 1958-ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய ஹிட்டானது.

Vanjkottai

அடேங்கப்பா..! மிரள வைக்கும் செட்டிங்ஸ்: ஜெயிலர், ஜவான் படமெல்லாம் இங்க தான் எடுத்தாங்களா?

வைஜயந்தி மாலா, எம்.ஜி.ஆருடன் ‘பாக்தாத் திருடன்’ படத்தில் நடித்து இருக்கிறார். வைஜயந்தி மாலா எம்ஜிஆர் அவர்களை பற்றி கூறும் போது, “மிகப் பெரிய ஹீரோ, ஆனால், அந்த பந்தா இல்லாமல் ரொம்ப எளிமையாக, ரொம்ப மரியாதையாகப் பழகுவார். ஒரு காட்சியில் என்னைத் தூக்கிச் சென்று படுக்கையில் போடவேண்டும்.

டைரக்டரிடம், ‘வைஜெயந்தியின் அம்மாவிடம் சென்று இந்தக் காட்சியை விளக்கி அனுமதி பெற்று வாருங்கள். பிறகு எடுக்கலாம்’ என்று கூறிவிட்டார். அம்மா வந்து பார்த்து, ‘எவ்வளவு உயரத்தில் இருந்து பாப்பாவை (என்னை) போடுவார், அடிபடாதா?’ என்றெல்லாம் பார்த்த பிறகு, தயக்கத்தோடு அனுமதித்தார். மிகவும் ஜென்டிலாக பூ மாதிரி என்னைத் தூக்கி மெதுவாகப் போட்டார் எம்.ஜி.ஆர்”.

வைஜயந்தி மாலா சிவாஜியுடன் ‘சித்தூர் ராணி பத்மினி’யில் நடித்து உள்ளார். நடிகர் சிவாஜி கணேசனை பற்றி வைஜயந்தி மாலா கூறும் போது, சிவாஜி கணேசனின் நடிப்புத் திறமை நம்மை வியக்கவைக்கும். ‘பாப்பா’ என்றுதான் என்னை அழைப்பார். எப்படி நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சொல்வாராம்”.

ஹீரோயின்களிடத்தில் மோகன் இப்படித்தான் இருப்பாரா? பெருமையாகச் சொன்ன சுஹாசினி

தேன்நிலவு படத்தில் ஜெமினியும், வைஜெயந்தி மாலாவும் காஷ்மீர் தால் ஏரியில் நடித்தபோது எதிர்பாராத விதமாக ஏரியில் விழுந்து விட்டார் வைஜயந்தி மாலா அவர்கள். உடனே கேமராமேன் வின்சென்ட் தண்ணீரில் குதித்து, இவரை காப்பாற்றி விட்டார்.

தேனிலவு படத்தின் விபத்தின் போது, மும்பை குர்லா பகுதியில் இருந்த ஒரு டாக்டரின் கிளினிக்குக்கு தான் வைஜயந்தி மாலாவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்கள். அங்கே இவருக்கு சிகிச்சை அளித்தவர் டாக்டர் பாலியை வாழ்க்கைத்துணையாக அமைத்துக்  கொண்டார்.

கணவரின் தூண்டுதலால் தான் கோல்ஃப் ஆட்டத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார் வைஜயந்தி மாலா. அதன்படி கோல்ஃப் ஆட்டத்தில் பல போட்டிகளில் வென்று நிறைய பரிசுகள் பெற்றிருக்கிறார்.

தற்போது 89 வயதாகும் வைஜயந்தி மாலா அவர்கள், இந்த வயதிலும் கோல்ப் விளையாடுகிறார். தொடர்ந்து கோல்ப் விளையாடுவதாலேயே, இவருக்கு மனமும் உடலும் நன்றாக இருக்கிறது என்று கூறுகின்றார்!

1954-ம் ஆண்டு, பிரதீப் குமாருடன் இணைந்து, ‘நாகின்’ படத்தில், தனது இந்தி திரையுலகத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1955-ம் ஆண்டுமுதல், இந்தி திரையுலகம், வைஜெயந்தி மாலாவைத் தனதாக்கிக் கொண்டது. ‘மதுமதி’, ‘தேவதாஸ்’, ‘Naya Daur’, ‘சங்கம்’, ‘சூரஜ்’, ‘கங்கா ஜமுனா’ ‘Jewel Thief’, ‘Zindagi’, ‘Bahar’ ஆகிய திரைப்படங்கள் வைஜெயந்திமாலாவின் புகழை, வானம்வரை கொண்டு சென்றன.