நிவேதா பெத்துராஜ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டதுடன், தமிழில் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’ போன்ற படங்களில் நடித்ததன்மூலம் தமிழ் சினிமாவில் புகழ்பெற்றார்.
இதனைத் தொடர்ந்து இவருக்கு மென்டல் மடிலோ என்னும் தெலுங்குப் படத்தில் நடிக்க வாய்ப்பினைப் பெற்றார். தெலுங்கிலும் அறிமுகப் படம் ஹிட் ஆக, தெலுங்கு உலகிலும் கொண்டாடப்படும் நடிகையாக இருந்து வருகிறார்.
தற்போது அவ பார்ட்டி, திமிரு புடிச்சவன் படங்களில் நடித்து வருகிறார். ஊரடங்கினால் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் இவர், நடிகர் விவேக்கை பாராட்டியுள்ளார்.
அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளதாவது, “என்னுடைய சிறு வயது முதலே எனக்கு விவேக் சாரைப் பிடிக்கும். மற்ற நகைச்சுவை நடிகர்களைக் காட்டிலும் அவரிடம் ஒரு தனித்தன்மை இருக்கும். அவரை என் அம்மா, அப்பாவிற்கு மிகவும் புடிக்கும்.
நகைச்சுவையில் சமூகத்திற்கு கருத்துகளைச் சொல்ல முடியும் என்று நிரூபித்தவர் விவேக் சார். குடும்பத்தோடு சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தாராள பிரபு படத்தை பார்த்தோம். உண்மையில் மிகச் சிறப்பான கருத்தினைக் கொண்டு கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக உள்ளது.
நடிப்பினைத் தாண்டி இயற்கை ஆர்வலராகவும் அவரைப் பிடிக்கும்” என்று கூறியுள்ளார்.