சீரியலில் இல்லை… படத்தில் இணைகிறது கவிலியா ஜோடி!!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் பிக் பாஸ்க்கு கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக பணியாற்றியவர் கவின், அவர் ஆரம்பத்தில் இருந்தே 4 பெண்களை காதலித்து வந்தார். அதன்பின்னர்…

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் பிக் பாஸ்க்கு கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக பணியாற்றியவர் கவின், அவர் ஆரம்பத்தில் இருந்தே 4 பெண்களை காதலித்து வந்தார்.

அதன்பின்னர் ஷாக்சியிடம் காதலை வெளிப்படுத்தி ரொமான்ஸ் செய்துவர, ஓரிரு நாட்களில் காதல் ப்ரேக் அப் ஆனது, உடனே லாஸ்லியாவிடம் பழகி அவரிடமும் காதலை வெளிப்படுத்தினார்.

1 மணி நேர நிகழ்ச்சியில் 30 நிமிடம் இவர்கள் காதலே ஓடும், இன்னொரு சரவணன்- மீனாட்சியாக உள்ளே வலம் வந்தனர். இதன்மூலமே கவிலியா ஆர்மி எல்லாம் உருவாகி நினைத்தபடி லாஸ்லியா பைனலுக்கு சென்றார்.

17c27295c2cf96aabf3e817f21655356

வெளியே வந்த இவர்கள் சந்தித்தாக தெரியவில்லை, ஆனால் இவர்களுக்கு இருக்கும் ரசிகர்களோ இவர்களை ஒன்றாக பார்க்க ஆவலாக உள்ளனர்.

இந்தநிலையில் இவர்கள் இருவரும் ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகின. அது உண்மையா என்று தெரியவில்லை. அவர்கள் இருவரும் ஒரு பிரபல இயக்குனரின் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த உறுதித் தகவலை எதிர்பார்த்து கவிலியா ஆர்மி காத்துக் கொண்டிருக்கிறது.  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன