என் லெவலுக்கு கோலிவுட்டில் யாரும் இல்லை- பிக் பாஸ் போட்டியாளர்!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் ஒருவர் மீரா மிதுன். வெளியே வந்த அவர் பல சர்ச்சைக்குரிய வீடியோக்களை போட்டு வந்தார். முகின், தர்ஷன், கவின், சேரன், அபிராமி, ஷாக்சி,…

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் ஒருவர் மீரா மிதுன்.

வெளியே வந்த அவர் பல சர்ச்சைக்குரிய வீடியோக்களை போட்டு வந்தார். முகின், தர்ஷன், கவின், சேரன், அபிராமி, ஷாக்சி, ஷெரின் என போட்டியாளர்களைப் பற்றி சர்ச்சைகளை கிளப்பினார்.

போட்டியாளர்கள் யாரும் பெரிதாக கண்டுகொள்ளாத நிலையில், கமல் ஹாசன் குறித்த வீடியோவை வெளியிட்டார். தற்போது அவர், “கோலிவுட்டில் இருக்கும் நடிகர், நடிகைகளைவிட நான் திறமையானவள்.

b78baf2cc039cc3dcc7cd8d95f9d8430

நான் நடிகை ஆவதற்கு முன்பே பிரபலமானவள், அதனாலேயே என்மீது பொறாமை கொண்டு என்னைப் பற்றிய சர்ச்சைகளை கிளப்புகின்றனர்.

ஆனால் இவர்களைப் பற்றி யோசிக்க எனக்கு நேரம் இல்லை, நான் பாலிவுட்டில் சில படங்களில் நடிக்க உள்ளேன், அதற்கான போட்டோஷூட்களில் ஈடுபட்டு வருகிறேன்.

நான் ஏதாவது ஒரு படம் பண்ணவேண்டும் என்று நினைத்து இருந்தால் கோலிவுட்டில் இருந்து இருப்பேன், ஆனால் நான் சாதிக்க வேண்டியது பாலிவுட்டில் தான்” என்று கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன