ஜனனி ஐயர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் ஆரம்ப காலங்களில் விளம்பரங்களில் நடித்து வந்தார், இவருக்கு சினிமாவில் திரு திரு துரு துரு என்னும் படத்தின்மூலம் வாய்ப்பு கிடைத்தது, அடுத்து இவர் விண்ணைத் தாண்டி வருவாயா படத்திலும் நடித்துள்ளார்.
சிறு சிறு கதாபாத்திரங்களில் மட்டுமே தலைகாட்டிவந்த இவருக்கு அவன் இவன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் பாகன், தெகிடி, அதே கண்கள், முப்பரிமாணம், பலூன், விதி மதி உல்டா, தர்ம பிரபு போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது கசட தபற, வேழம் போன்ற படங்களில் நடித்துள்ள இவர் கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாததால் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகிறார். மேலும் ஓய்வு நேரத்தில் அவ்வப்போது போட்டோஷுட் நடத்தி அதை இன்ஸ்டாவில் போட்டு வைரலாக்கி வருகிறார்.
அந்தவகையில் தற்போது ஜனனி ஐயர் பாட்டுப் பாடி அந்த வீடியோவினை பதிவிட்டுள்ளார். மேலும் அத்துடன், “முதல்முறையாக என்னால் முடிந்த அளவு முயற்சி செய்து பாடியுள்ளேன். இந்த பாடல் ஸ்கைப் மூலம் ரெக்கார்டிங் செய்யப்பட்டது. இந்த பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றும் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்களோ சூப்பரா இருக்கு, பேசாம பாடகி ஆய்டுங்க என்று ஐடியா கொடுத்துள்ளனர்.