எதேச்சையாகக் கேட்ட டைரக்டர்.. உடனே ஓ.கே. சொல்லிய தளபதி விஜய்.. சூப்பர் ஹிட்டான லவ் ஸ்டோரி!

By John A

Published:

தளபதி விஜய் நடிப்பில் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை ஆகிய இரு பெரும் வெற்றிப் படங்களுக்குப் பின் தமிழ் சினிமாவில் விஜய்யின் மார்க்கெட் சரசரவென எகிறியது. தொடர்ந்து வந்த காதல் திரைப்படங்களால் விஜய்க்கு பெண் ரசிகைகள் மிக அதிக அளவில் உருவாகத் தொடங்கினர். இந்நிலையில் இவரின் வெற்றிக்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில் அடுத்த பிளாக் பஸ்டர் திரைப்படமாக வெளிவந்தது தான் ‘நினைத்தேன் வந்தாய்’ திரைப்படம்.

இந்தப் படத்தின் இயக்குநர் கே.செல்வபாரதிக்கு இதுதான் முதல் படம். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற பெல்லி சண்டாடி திரைப்படத்தின் ரீமேக்தான் இந்த நினைத்தேன் வந்தாய் திரைப்படம். இயக்குநர் செல்வபாரதி ஒருமுறை விஜய் வீட்டு வழியாக செல்லும் போது எதேச்சையாக உடன் வந்தவர் இதுதான் எஸ்.ஏ.சந்திரசேகர் அலுவலகம் என்று கூற, உடனே செல்வபாரதிக்கு ஒரு பொறி தட்டியது. தான் இயக்கப் போகும் அடுத்த படத்திற்கு விஜய்யை கதாநாயகனாக நடிக்க வைக்க யோசனை பிறக்க எஸ்.ஏ.சி-யை சந்தித்திருக்கிறார்.

அப்போது எஸ்.ஏ.சி இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார் என்று கேட்க இயக்குநர் செல்வபாரதி அல்லு அர்விந்த் என்று கூற, உடனே எஸ்.ஏ.சி மகிழ்ச்சியாகி தெலுங்கு பதிப்பை ஒருமுறை பார்த்துவிடுகிறேன் என்று கூற, இயக்குநரும் தெலுங்கு பதிப்பை எஸ்.ஏ.சி, விஜய், அவரது தாய் ஷோபா ஆகியோருக்கு போட்டுக் காட்டியிருக்கிறார். உடனே விஜய் மறுப்பேதும் சொல்லாமல் எப்படி தமிழுக்கு மாற்றப் போகிறீர்கள் என்று எதுவுமே கேட்காமல் ஒகே சொல்லியிருக்கிறார்.

தயாரிப்பாளர் அல்லு அர்விந்த் தெலுங்கு சினிமாவின் மூத்த தயாரிப்பாளர். மேலும் தற்போதைய டோலிவுட் ஆக்சன் ஸ்டார் அல்லு அர்ஜுனின் தந்தையும் ஆவார். இவ்வாறாக நினைத்தேன் வந்தாய் திரைப்படம் உருவானது. தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக மல்லிகையே மல்லிகையே.., உனை நினைத்து நான் எனை மறப்பபது.., வண்ண நிலவே…, போன்ற அப்போது டிவிக்களையும், கேசட்டுகளையும், ஆக்கிரமித்தன.

சிலிர்க்க வைக்கும் வெண்கலக் குரலரசி.. லேடி சீர்காழி கோவிந்தராஜன்.. அடேங்கப்பா இதெல்லாம் இவர் பாடியதா?

இதில் வண்ண நிலவே பாடல் காட்சியின் போது இயக்குநருக்கும், ரம்பாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட ரம்பா படத்திலிருந்து விலகினார். எனவே அந்தப் பாடலில் கடைசி காட்சிகளுக்கு ரம்பாவிற்குப் பதிலாக டூப் போட்டு நடிக்க வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நினைத்தேன் வந்தாய் படத்திலிருந்து தான் விஜய் மேனரிஸ பேச்சான அண்ணா என்பது வழக்கமானது.