பிருத்விராஜ் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது தந்தை சுகுமாரன் மற்றும் தாயார் மல்லிகா இருவரும் நடிகர்கள் ஆவர். அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு பிருத்விராஜ்க்கு கிடைத்தது.
2002 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமான பிருத்விராஜ் 2005 ஆம் ஆண்டு கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு பாரிஜாதம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் பிருத்விராஜ்.
பின்னர் மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், ராவணன் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் பிருத்விராஜ்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட பிருத்விராஜ் பிரபலங்களின் வீட்டில் துக்கம் நடக்கும்போது இதை செய்யாதீங்க என்று கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் என்னுடைய தந்தை இறந்தபோது எங்கள் வீட்டிற்கு மம்மூட்டி சார் மோகன்லால் சார் எல்லாரும் பாக்குறதுக்கு வந்தாங்க. அப்போ எங்க வீட்டுக்கு வெளியே பொதுமக்கள் நின்னு அவங்கள பாத்து கைதட்டி ஆரவாரமா கத்திட்டு இருந்தாங்க.
அதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. ஏன்னா நாங்க வீட்டுக்குள்ள ரொம்ப வருத்தத்தில் இருக்கிறோம் இப்படி இவங்க பண்றாங்கன்னு தோணுச்சு. பிரபலங்களோட வீட்ல துக்கம் ஏற்பட்டா கண்டிப்பா அந்த இடத்துல பொதுமக்களை அனுமதிக்கவே கூடாது என்று உருக்கமாக பேசியிருக்கிறார் பிருத்விராஜ்.