சில நாட்களுக்கு முன்பு Netflix நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமண டாக்குமெண்டரியை வெளியிட்டு இருந்தது. இவர்களது திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண ஆல்பம் வெளியானது.
இந்த இரண்டு வருட இடைவேளைக்கு காரணம் தனுஷ் தான் அவர்தான் என் ஓ சி சர்டிபிகேட் தரவில்லை அவரால்தான் இவ்வளவு லேட் ஆகிவிட்டது என்று தங்களது டாக்குமென்டரி ரிலீஸ் ஆகும் சமயத்தில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர். இது அவர்களது டாக்குமெண்டரியை பிரபலப்படுத்துவதற்காக அவர்கள் செய்த செயல் என பலரும் பேசி வந்தனர். ஆனால் இவர்கள் ஏற்படுத்திய பரபரப்பில் லாபம் அடைந்தது Netflix தான்.
ஏனென்றால் பலரும் இவர்களது திருமணத்தையே மறந்துவிட்ட நிலையில் இந்த சர்ச்சை ஏற்பட்டதால் அனைவரும் நயன்தாராவின் டாக்குமென்டரியை சென்று பார்த்தனர். தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோரை தொடர்ந்து இன்னொரு நட்சத்திர ஜோடியின் திருமணத்தின் Wedding Video Rights ஐ Netflix வாங்கி இருக்கிறது.
அவர்கள் யார் என்றால் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரான நாகார்ஜுனா அவர்களின் மகன் நாக சைதன்யாவிற்கும் சோபிதா துலிபாலா ஆகியோர் தான். பிரபல தென் இந்திய நடிகை ஆன சமந்தாவின் முன்னாள் கணவர் தான் நாக சைதன்யா. இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.
தற்போது நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவதாக திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் வருகிற டிசம்பர் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. இலையில் Netflix இவர்களது திருமண வீடியோவை வெளியிடும் Wedding Video Rights ஐ 50 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. இதை அறிந்த நெட்டிசன்கள் என்ன Netflix இந்த அளவுக்கு இறங்கி விட்டது என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.