புது லுக்கில் ரசிகர்களுக்காக மீண்டும் களமிறங்கும் லெஜண்ட் சரவணன்! தெறிக்க விடும் அப்டேட்!

தனது விளம்பரப்படங்களின் மூலம் பிரபலமான சரவணன் தனது சொந்த தயாரிப்பில் லெஜண்ட் என்ற படத்தில் ஹீரோவாக திரைத்துறையில் களம் இறங்கினார். சுமார் 100 கோடி மதிப்பில் உருவான அந்த திரைப்படத்தை‌ பிரபல இயக்குனர்‌ ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கினர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பல முன்னணி நட்ஷத்திரங்கள் இணைந்து நடித்திருந்த லெஜெண்ட் படம் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திரையரங்கில் வெளியானது. ஆனால் லெஜன்ட் திரைப்படத்திற்கு சுமாரான வரவேற்பு தான் கிடைத்தது.

முதல் படமாக இருந்த போதும் உலகம் முழுவதும் 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் 5 மொழிகளில் இந்த திரைப்படம் வெளியானது சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதனை அடுத்து லெஜண்ட் சரவணன் எப்போது அடுத்த பட அறிவிப்பை வெளியிடப் போகிறார் என எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது புது லுக்கில் வந்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

அதன் மூலம் தனது இரண்டாவது படத்திற்கான கதையை உறுதி செய்யும் பணியில் லெஜண்ட் சரவணன் ஈடுபட்டு வந்த நிலையில், ஒரு கதையை தற்போது தேர்வு செய்து ஓகே சொல்லி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிக்கு பதிலாக களமிறங்கிய கமல்! தரமான சம்பவத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

தற்போது இவரது அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தையும் அவர் பெரிய அளவில் பிரம்மாண்டமாக எடுக்க திட்டம் போட்டு உள்ளதாகவும், ஹீரோயினாக முன்னணி நடிகையின் தேர்வாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...