குஷ்பு, மீனாவை அடுத்து ரஜினிக்கு 3வது ஜோடியாகும் நயன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் டி இமான் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தலைவர் 168’. ‘அண்ணாத்தே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும்…


e2f0ee7284a521c1a26909a312e76d8e

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் டி இமான் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தலைவர் 168’. ‘அண்ணாத்தே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரம் சென்னையில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிட தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனாவும், வில்லியாக குஷ்புவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடித்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளது. இந்த நிலையில் எதிர்பாராத திருப்பமாக இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

ஏற்கனவே மூன்று நாயகிகள் இருக்கும் இந்த படத்தில் நயன்தாராவுக்கு என்ன வேலை? என்பதுதான் தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது. சிறுத்தை சிவா என்ன விடை கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன