புரமோஷன் விழாவுக்கு வந்த நயன்தாரா.. அதிலும் இன்னொரு நடிகை படத்திற்கு..! அதிசயம் ஆனால் ஆச்சரியம்..!

Published:

நடிகை நயன்தாராவை ஒரு திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யும் தயாரிப்பாளர்களிடம் முதலில் அவர் கூறும் நிபந்தனை எந்தவித புரமோஷனு க்கும் வர மாட்டேன் என்பதுதான். இதுவரை அவர் மிகக்குறைந்த அளவே புரமோஷனுக்கு வந்துள்ளார் என்பதும் பெரும்பாலும் அவர் நடிக்கும் படங்களுக்கு புரமோஷனுக்கு வரமாட்டேன் என்று ஒப்பந்தத்திலேயே எழுதப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நயன்தாரா தன்னுடைய படத்தின் புரமோஷனுக்கே வராத நிலையில் இன்று அவர் வேறொரு நடிகை நடித்த படத்தின் புரமோஷனுக்கு வந்திருப்பது தான் கோலிவுட் திரை உலகிற்கே மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது.

nesipaya2

அதர்வா முரளியின் சகோதரர் ஆகாஷ் முரளி நாயகனாகவும் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ’நேசிப்பாயா’. விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சமீபத்தில்  இந்த படத்தின் டைட்டில் வெளியானது என்பதும் இதனை அடுத்து இன்று ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் நிகழ்ச்சி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சிக்கு நயன்தாரா வருவார் என்று யாருமே எதிர்பாராத நிலையில் திடீரென அவர் வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். தனக்கு மிகவும் விருப்பமான இயக்குனர் விஷ்ணுவர்தன் என்றும் அவர் கேட்டுக் கொண்ட பிறகும் என்னால் இந்த விழாவுக்கு வராமல் இருக்க முடியவில்லை என்றும் பொதுவாக நான் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்றாலும் விஷ்ணுவர்தனுக்காக வந்தேன் என்றும் அவர் இந்த விழாவின் போது பேசினார்.

nesipaya 1

இதை அடுத்து ’நேசிப்பாயா’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அவர் வெளியிட்ட நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவான அஜித்தின்  ’ஆரம்பம்’ என்ற திரைப்படத்தில் நயன்தாரா தான் நாயகி என்பதும் இந்த ஒரு படத்தில் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் தான் பல ஆண்டுகளுக்கு அளித்து விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் போஸ்டர் விழாவுக்கு நடிகை நயன்தாரா வருகை தந்து விழாவை சிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...