நயன்தாராவின் இரட்டை வேடத்தில் வெளியான ஐரா!!

ஐரா  2019 ஆம் ஆண்டு நயன்தாராவை முக்கிய கதாபாத்திரத்தில் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். நயன்தாராவின் இரட்டை வேடத்தில் இந்தத் திரைப்படம் திகில் திரைப்படமாக உருவாகி இருக்கும். இந்தத் திரைப்படத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு ஆகியோர்…

ஐரா  2019 ஆம் ஆண்டு நயன்தாராவை முக்கிய கதாபாத்திரத்தில் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். நயன்தாராவின் இரட்டை வேடத்தில் இந்தத் திரைப்படம் திகில் திரைப்படமாக உருவாகி இருக்கும்.

இந்தத் திரைப்படத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு ஆகியோர் நடித்து இருந்தனர். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இந்தத் திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

நயன்தாரா ஒரு கதாபாத்திரத்தில் கருப்பு கலரில் பிறந்து குடும்பம மற்றும் சமூகத்தால் ஒதுக்கப்படும் ஒரு பெண்ணாக சவாலான ரோலில் நடித்து இருப்பார். அதேபோன்று மற்றொரு நயன்தாரா யூடியூப் சேனல் நடத்தி வரும் இக்காலப் பெண்ணாக நடித்து இருப்பார்.

626927fe18c723b091ba4abade6640c6-1

நயன்தாராவிற்கு பெரிய அளவில் பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் பெரிதளவில் போகவில்லை.

திரைக்கதை வலுவானதாக இருந்தாலும், திகில் காட்டுகிறேன் என்ற பெயரில் முதல் பாதியில் பல சொதப்பல்கள் இருந்தன. இதுவே படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

ரூ.10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.5  கோடி வசூலைத் தாண்டவே போதும் போதும் என்கிற அளவு போராடி விட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன