இரட்டை குழந்தை பிறந்த யோகம் .. பிரம்மாண்ட தயாரிப்பாளருடன் இணையும் நயன்!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என மக்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, இவர் சமிபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டு இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். அதை தொடர்ந்து…

nayanthara cinemapettai 1 1200x720 1

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என மக்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, இவர் சமிபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டு இரட்டை குழந்தைகளுக்கு தாயானார்.

அதை தொடர்ந்து பல படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். கோல்ட், கனெக்ட் ஆகிய திரைப்படங்கள் நடித்து வெளியீட்டிருக்காக காத்துள்ளது, மேலும் இறைவன், நயன்தாரா 75 ஆகிய படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் இரட்டை குழந்தை பிறந்த யோகத்தில் பல படங்களில் கமிட்டாக்கி வருகிறார் நயன். அந்த வகையில் ‘கேஜிஎஃப்’ 1, ‘கேஜிஎஃப் 2’ புகழ் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உலக அளவில் பெரும் வெற்றியை அடைந்ததை தயாரிப்பு நிறுவனத்துடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இவர்கள் தயாரிப்பில் வெளியான காந்தாரா திரைப்படம் 400 கோடி வசூலை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. நயன்தாராவை வைத்து பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்துடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்! கலக்கலான போட்டோஸ்!

மேலும் பிரேமம் புகழ் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையில் நயன்தாரா நடிப்பில் கோல்டு மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.